சுவையான பஞ்சாபி பட்டர் சிக்கன் செய்வது எப்படி?

சுவையான பஞ்சாபி பட்டர் சிக்கன் செய்வது எப்படி?

0

எலும்புகளை ஆரோக்கியமாக்கும் சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். 

சுவையான பஞ்சாபி பட்டர் சிக்கன் செய்வது எப்படி?
அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். சிக்கனில்  உள்ள B வைட்டமின்கள் கண்புரை மற்றும் தோல் கோளாறுகளைத் தடுக்கவும், 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்,  பலவீனத்தை நீக்கவும், செரிமானத்தை மேன்படுத்தவும், நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும்.  

உடலில் தோன்றும் கட்டிகளை குணமாக்கும் சப்பாத்திக்கள்ளி !

உங்கள் வீட்டில் உள்ளோர் சிக்கன் சைடு டிஷ் கேட்கிறார்களா? அப்படியானால் பஞ்சாபி பட்டர் சிக்கனை செய்து கொடுங்கள். 

இந்த பட்டர் சிக்கன் செய்வது மிகவும் ஈஸி மற்றும் அட்டகாசமான சுவையைக் கொண்டிருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

இந்த பஞ்சாபி பட்டர் சிக்கன் செய்தால், 1 சப்பாத்தி சாப்பிடும் குழந்தைகள், 2-3 சப்பாத்தி வரை வாங்கி சாப்பிடுவார்கள். 

உங்களுக்கு பஞ்சாபி பட்டர் சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வது எப்படி? என்று செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது. 

தேவையான பொருட்கள் : .

ஊற வைப்பதற்கு...

சிக்கன் - 500 கிராம்

தயிர் - 1/4 கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

சீரகத் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

முதல் நாள் உணவை மறு நாள் சாப்பிடக் கூடாது ஏன்?

சாஸ் செய்வதற்கு...

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்

கருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்

பட்டை - 1 துண்டு

ஏலக்காய் - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 (கீறியது)

தக்காளி - 6 (அரைத்தது)

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

சீரகத் தூள் - 2 டீஸ்பூன்

முந்திரி - 20 (அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்)

உப்பு - சுவைக்கேற்ப

சர்க்கரை - 2 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப

கசூரி மெத்தி - சிறிது

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

க்ரீம் - 1/2 கப்

மார்பின் புள்ளியில் தேய்ப்பதால் கிடைக்கும் பெறும் நன்மைகள் !

செய்முறை : .

சுவையான பஞ்சாபி பட்டர் சிக்கன் செய்வது எப்படி?

முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் கழுவிய சிக்கனை எடுத்து, அத்துடன் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், 

மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, எலுமிச்சை சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த சிக்கனை குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். 

சிக்கன் நன்கு ஊறியதும், ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு நன்கு பொன்னிறமாகும் வரை ப்ரை செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின் அதில் கருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வாக்க வேண்டும்.

கர்ப்பிணிகள் ஒன்பதாவது மாதத்தில் என்ன சாப்பிட வேண்டும்?

அதன் பின் மிளகாய் தூள், சீரகத் தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து கிளறி நன்கு வேக வைக்க வேண்டும். பின்னர் முந்திரி பேஸ்ட் சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

அடுத்து அதில் கிரேவிக்கு ஏற்ப சிறிது நீரை ஊற்றி கிளறி, ப்ரை செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.

பின்பு அதன் மேல் கசூரி மெத்தி இலைகளை கையால் நசுக்கி மேலே தூவி, அத்துடன் கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்க வேண்டும். பின் மேல் க்ரீம் மற்றும் வெண்ணெய் சேர்த்து கிளறினால் சுவையான பஞ்சாபி பட்டர் சிக்கன் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)