ஸ்வீட் பீடா என்பது என்ன? ஸ்வீட் பீடா தயாரிக்கும் முறை !

ஸ்வீட் பீடா என்பது என்ன? ஸ்வீட் பீடா தயாரிக்கும் முறை !

0

போதை சார்ந்த பொருட்கள் சேர்க்காமல் வெற்றிலை மற்றும் இதர சில பொருட்கள் சேர்த்து மடித்து விற்பனை செய்யப்படுவது தான் ஸ்வீட் பீடா. ஸ்வீட் பீடாவில் கலோரிகள் மிக அதிகம். 

ஸ்வீட் பீடா என்பது என்ன? ஸ்வீட் பீடா தயாரிக்கும் முறை !
என்றாவது ஒருநாள் ஒரு மாறுதலுக்கு ஸ்வீட் பீடா சாப்பிடுவதில் தவறில்லை. சாப்பாட்டுக்குப் பிறகு அது வாயில் ஏற்படுத்தும் நல்ல மணமும் ருசியும் அலாதியானது. 

ஆனால், ஸ்வீட் பீடாவை அடிக்கடியோ, தினமுமோ சாப்பிடுவது சரியானதல்ல.

இரும்புச் சத்து உணவுகள் உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படுத்தும் தெரியுமா?

தயாரிக்கும் முறை:

ஒரு எளிய பீடாவைத் தயாரிக்க, வெற்றிலையை முதலில் கழுவ வேண்டும். இரு புறமும் சுண்ணாம்பைப் பயன்படுத்த வேண்டும். (தேவைப்பட்டால் மட்டும்) சுப்பாரி (பாக்கு)  தேவைப்பட்டால் சிறிது சேர்க்கலாம்.

பின்னர் ஏலக்காய் தூள், தேனில் ஊற வைக்கப்பட்ட ரோஜா இதழ், சிறிய வெள்ளைநிற சர்க்கரை மிட்டாய்கள், பின்னர் சிறிது சிறிதாக வெட்டப்பட்ட செர்ரிக்கள் 

அல்லது இனிப்பு செய்யப்பட்ட வெவ்வேறு நிறமுடைய பப்பாளி (பழுக்கும் முன்பு சுத்தப்படுத்தி நிறம் மற்றும் இனிப்பு சுவையேற்றப் பட்டது) ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

பின்னர் வெற்றிலையை மடித்து அதன்மீது கீழுள்ளவாறு செர்ரி பழத்தை குச்சியின் உதவியுடன் சொருகி ஒரு போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் ஒரு போஸ்ட் போட்டு விட்டு (தற்போதைய கலாச்சாரம்) உண்ணலாம்.

அது எல்லோராலும் சாப்பிட உகந்ததா?

ஸ்வீட் பீடா என்பது என்ன? ஸ்வீட் பீடா தயாரிக்கும் முறை !

வெற்றிலை இலைகளை மென்று சாப்பிடுவது வாய்வழி புற்றுநோயைத் தடுக்கிறது. ஏனெனில் இது உமிழ்நீரில் அஸ்கார்பிக் அமிலத்தின் அளவை பராமரிக்க உதவுகிறது. 

ஆகவே வெற்றிலையினால் பாதிப்பு இல்லை. எல்லோரும் சாப்பிடலாம். ஆனால் ஸ்வீட் பீடாவை எடுத்துக் கொண்டால், அதில் கலக்கப்படும் சுப்பாரி அதாவது பாக்கின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். 

பழத்தில் சத்து எதில் உள்ளது ?

அல்லது பாக்கு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதை வைத்து குழந்தைகள் உண்ணுவதைத் தவிர்க்க அறிவுறுத்தலாம்.

10 முதல் 12 வெற்றிலைகளை சில நிமிடங்கள் வேக வைத்து, வேக வைத்த தண்ணீரில் தேன் சேர்த்து குடிப்பது நல்லது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)