சுவையான மட்டன் கொத்துக்கறி ப்ரை செய்வது எப்படி?





சுவையான மட்டன் கொத்துக்கறி ப்ரை செய்வது எப்படி?

0
அதிக மக்களால் விரும்பி சாப்பிடப்படும் அசைவ உணவாக ஆட்டுக்கறி உள்ளது. சாப்பிடுவதால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை குணப்படுத்தலாம். 
மட்டன் கொத்துக்கறி ப்ரை செய்வது எப்படி?
ஏனெனில் அந்தளவுக்கு அதில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. மட்டன் இதயத்தை வலிமைப் படுத்தும். 

ஏனெனில் மட்டனில் சாச்சுரேட்டட் கொழுப்புள்ளள் குறைவாகவும், அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளதால், இதய நோய் வரும் வாய்ப்பு குறையும். 
ஆட்டுக்கால் சூப்பை வைத்து சாப்பிடுவதனால் நமது எலும்புகள் வலுவாகும். இது பார்வை கோளாறுகளை சரி செய்து கூர்மையான பார்வையை நமக்கு பெற்றுத்தரும். 

ஆட்டு இறைச்சி சாப்பிடுவன் காரணமாக, நமது சிறுநீரக சுரப்பி வலிமை அடையும். 

ஆட்டுக்கறி சாப்பிட்டால், அதில் உள்ள பி வைட்டமின்கள், செலினியம் மற்றம் கோலைன் போன்றவை, எந்த வகையான புற்றுநோயும் தாக்காமல் உடலைப் பாதுகாக்கும். 

தோசை, பூரி, சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இந்த மட்டன் கொத்துக்கறி. இந்த மட்டன் கொத்துக்கறி செய்வது எப்படி? என்று தெரிந்துக் கொள்ளலாம்.
 
தேவையான பொருட்கள் : .
 
மட்டன் கொத்துக்கறி - 200 கிராம்,
 
எண்ணெய் தேவைக்கு ஏற்ப
 
தாளிக்க...
 
இடிச்ச பூண்டு - 3,
 
சின்ன வெங்காயம் - 5,
 
காய்ந்த மிளகாய் - 5,
 
கறிவேப்பிலை - சிறிது,
 
மட்டன் மசாலா - 4 டீஸ்பூன்,
 
கொத்தமல்லி, புதினா, உப்பு, நெய் - ½ டீஸ்பூன்.
குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை புலாவ் செய்வது எப்படி? 
செய்முறை : .
மட்டன் கொத்துக்கறி ப்ரை செய்வது எப்படி?
முதலில் மட்டன் கொத்துக் கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். அதன் பிறகு கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இடித்த பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
சுவையான அரைக்கீரை கொத்துக்கறி மசாலா செய்வது எப்படி? 
வெங்காயம் சற்று வதங்கியதும் மட்டன் கொத்துக்கறி, உப்பு, மட்டன் மசாலா சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து கொத்துக்கறி வேகும் வரை மூடி வைக்கவும்.
 

இறுதியாக தேவையான உப்பு சேர்த்து நெய், புதினா, மல்லி சேர்த்து பரிமாறவும். இப்போது சூப்பரான மட்டன் கொத்துக்கறி மசாலா ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)