சுவையான மைதா மில்க் பர்பி செய்வது எப்படி?





சுவையான மைதா மில்க் பர்பி செய்வது எப்படி?

0

மைதாவில் முற்றிலும் ஸ்டார்ச் என்ற சர்க்கரை மட்டுமே உள்ளது. கோதுமையில் உள்ள ஸ்டார்ச்சை மட்டுமே எடுத்து மைதா மாவு தயாரிக்கப் படுகிறது. குறிப்பாக கோதுமை மாவு பழுப்பு நிறத்தில் இருக்கும்.  

சுவையான மைதா மில்க் பர்பி செய்வது எப்படி?
ஆனால் இந்த மைதா மாவு மட்டும் ஏன் வெண்மையாக உள்ளது. ஏனென்றால் மைதா மாவில் பென்சோயில் பெராக்ஸைடு என்ற வேதியல் பொருள் கலந்து தயாரிக்கப் படுகிறது. 

இந்த பென்சோயில் பெராக்ஸைடு என்பது ஒரு கெமிக்கல் பொருள். இதை தலைக்கு அடிக்கும் டை, ஃபினாயில் மற்றும் பிளீச்சிங் பவுடர் போன்றவற்றில் கலப்பார்கள். 

அப்படிப்பட்ட கெமிக்கல் பொருளை மாவில் கலப்பதால் நீரிழிவு நோய், அல்சர் போன்ற நோய்கள் வருகின்றன. 

பொருட்கள் வெண்மையாக இருப்பதற்கு ப்ளீச் செய்வது போல மைதா மாவு வெண்மையாக இருப்பதற்காக ப்ளீச் செய்யப்படுகிறது. 

எனது கணவரை குடிப்பழக்கத்தால் இழந்தேன் !

இவ்வாறு ப்ளீச் செய்யும் போது மாவில் உள்ள குளோரின் டை ஆக்சைடு ஆனது ஸ்டார்ச்சுடன் வினைபுரிந்து Alloxan ஆக உருவாகிறது.

Alloxan என்பது ஒரு வகையான வேதிப்பொருள்.  இதை ஆய்வகங்களில் பயன்படுத்துவார்கள். சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணமே Alloxan தான். இந்த வேதிப்பொருள் மைதா மாவில் இருக்கிறது.

தேவையானவை :  .

மைதா – ஒரு கப், 

பால் – ஒரு லிட்டர், 

சர்க்கரை – மூன்றரை கப், 

நெய் – முக்கால் கப், 

ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.

அருமையான மும்பை ஸ்டைல் சாண்ட்விச் செய்வது எப்படி?

செய்முறை :  .

சுவையான மைதா மில்க் பர்பி செய்வது எப்படி?

பாலை சுண்டக் காய்ச்சி கோவா பதத்தில் எடுத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, காய்ந்ததும் (லேசாக புகை வரும் போது) மைதா மாவை தூவி நன்றாக பொன்னிறமாக வறுக்கவும். 

கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விடவும். இதனுடன் கோவாவை கட்டியில்லாமல் உதிர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும். 

வேறொரு பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, இரட்டை கம்பி பாகு பதம் வந்தவுடன் அதில் மைதா கலவை, ஏலக்காய்த் தூள் தூவி இரண்டு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும். 

மகனை விட்டு கொடுக்க முடியவில்லை... தாயின் அழுகை !

இப்போது பாத்திரத்தை கீழே இறக்கி சிறிது நேரம் கழித்து பார்த்தால்… ஏடு போல் படிந்து இருக்கும். அந்த சமயம் அக்கலவையை மேலும் கொஞ்சம் கிளறி நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி பரவலாக்கவும். பிறகு, துண்டுகள் போடவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)