சுவையான ஜீரா சிக்கன் செய்வது எப்படி?





சுவையான ஜீரா சிக்கன் செய்வது எப்படி?

0

நீங்கள் சிக்கன் பிரியரா? அடிக்கடி வீட்டில் சிக்கன் வாங்கி சமைப்பீர்களா? அப்படி சமைக்கும் போது ஒரே மாதிரியான சுவையிலேயே சிக்கனை சமைத்து சாப்பிடுவீர்களா? 

சுவையான ஜீரா சிக்கன் செய்வது எப்படி?
அடுத்த முறை சிக்கனை வாங்கும் போது, அதில் சற்று வித்தியாசமான சுவையில் சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் ஜீரா சிக்கனை செய்யுங்கள்.

இந்த ஜீரா சிக்கன் சீரகத்தின் மணத்தைக் கொண்டிருக்கும் மற்றும் இது ஒரு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். 

முக்கியமாக வீட்டில் சாம்பார் வைத்து, ஜீரா சிக்கனை சைடு டிஷ்ஷாக சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு ஜீரா சிக்கனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜீரா சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது. 

இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதற்கு காரணம் ?

தேவையான பொருட்கள் : .

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ (ஓரளவு நீளத் துண்டுகளாக வெட்டியது)

பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)

சீரகத் தூள் - 2 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

தண்ணீர் - 1/2 கப்

எலுமிச்சை சாறு - தேவையான அளவு

செய்முறை : .

சுவையான ஜீரா சிக்கன் செய்வது எப்படி?

முதலில் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடேற்ற வேண்டும். பின் அதில் சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.

அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளற வேண்டும். பின் அதில் சிக்கனைக் கழுவிப் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

பின்னர் அதில் நீரை ஊற்றி, மிதமான தீயில் வைத்து 10-15 நிமிடம் மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.

15 நிமிடம் ஆனதும், மூடியைத் திறந்து, தீயை அதிகரித்து, ட்ரையாகும் வரை நன்கு கிளறி இறக்கி, மேலே எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து விட்டால், சுவையான ஜீரா சிக்கன் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)