சுவையான பீட்ரூட் ஆலு கட்லெட் செய்வது எப்படி?





சுவையான பீட்ரூட் ஆலு கட்லெட் செய்வது எப்படி?

0
பீட்ரூட் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இதனால் பல நோய்கள் மற்றும் தொற்றுகளில் இருந்து நாம் காப்பாற்றப் படுகிறோம். குறிப்பாக அதன் ஜூஸ் மற்றும் சாலட் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
சுவையான பீட்ரூட் ஆலு கட்லெட் செய்வது எப்படி?
அடிக்கடி மலச்சிக்கல் மற்றும் வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும், ஏனெனில் அதில் உள்ள நார்ச்சத்து உங்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

மாலை வேளையில் வடை, பஜ்ஜி, பக்கோடா சாப்பிட்டு அலுத்து விட்டதா? உங்கள் குழந்தைகள் உங்களிடம் கட்லெட் சாப்பிட கேட்கிறார்களா?

உங்கள் வீட்டில் பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு இருந்தால், அதைக் கொண்டு ஒரு அற்புதமான பீட்ரூட் ஆலு கட்லெட் செய்யுங்கள். இந்த கட்லெட் காபி, டீ குடிக்கும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும். 

மேலும் இது ஆரோக்கியமான ஸ்நாக்ஸும் கூட. அதோடு இது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்து கொடுக்க ஏற்றதாகவும் இருக்கும்.
சரி இனி பீட்ரூட் உருளைக்கிழங்கு கொண்டு சுவையான பீட்ரூட் ஆலு கட்லெட் செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம். 
தேவையான பொருட்கள் : .
 
துருவிய பீட்ரூட் - 1 கப்
 
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1
 
வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
 
சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
 
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
 
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
 
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
 
கொத்தமல்லி - சிறிது
 
உப்பு - சுவைக்கேற்ப
 
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சோயா மீட் கட்லெட் செய்வது எப்படி?
செய்முறை : . சுவையான பீட்ரூட் ஆலு கட்லெட் செய்வது எப்படி?
முதலில் துருவிய பீட்ரூட்டை எடுத்து, அதில் உள்ள அதிகப் படியான ஜூஸை கையால் பிழிந்து விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 
பிறகு அதில் வேகர்க்கடலை, மாங்காய் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரக தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் கொத்த மல்லியை சேர்த்து நன்கு கையால் பிசைந்து கொள்ள வேண்டும்.
 
பின் கையில் சிறிது நெய்யைத் தடவி, பிசைந்து வைத்துள்ள கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டி, கட்லெட் வடிவில் தட்டிக் கொள்ள வேண்டும்.
ருசியான மொகல் சிக்கன் செய்வது எப்படி? 
பின்னர் ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1-2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, தட்டி வைத்துள்ள கட்லெட் துண்டுகளை வைத்து முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், பீட்ரூட் ஆலு கட்லெட் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)