சப்பாத்திக்கு அருமையான சிக்கன் கீமா செய்வது எப்படி?





சப்பாத்திக்கு அருமையான சிக்கன் கீமா செய்வது எப்படி?

0

நம் உடலுக்கு அதிமுக்கியத் தேவையான வைட்டமின் B, E மினரல்கள், காப்பர், ஸிங்க், ஐயோடின், சிலிகான், பொட்டாசியம் மற்றும் கால்சியம் மற்றும் இதர மினரல் உப்புகள் கோதுமை மாவில் அடங்கி யிருக்கின்றன.

சப்பாத்திக்கு அருமையான சிக்கன் கீமா செய்வது எப்படி?
சில வாழைப்பழமும் சேர்ப்பதுண்டு. சப்பாத்தி சுடும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். 

உதாரணமாக, அதை தோசைக்கல்லில் வைத்து, அதை ஒரு முறை இரண்டு புறமும் சூடாக்கி பின் அதை அப்படியே எடுத்து நேரடியாக தீயில் காட்டினால் நன்கு உப்பி சாஃப்டாக வரும். 

மேலும் மாவுடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலந்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன், ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கலந்துக் கொள்ளுங்கள். 

எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து மாவு பிசைவதால் சப்பாத்தி சாஃப்ட்டாக வரும். கோதுமையில் கார்போ ஹைட்ரேட் நிறைந்துள்ளதால் நாள் முழுவதும் ஆற்றல் சக்தியை உடலுக்கு அளித்து சுறுசுறுப்பும் அளிக்கிறது. 

மேலும் மூளையின் செயல்திறனும் அதிகரிக்கிறது. நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு போன்ற நாள் பட்ட வியாதிகளால் அவஸ்தைப் படுவோருக்கு சப்பாத்தி தான் சிறந்த டயட் உணவு.

தேவையான பொருட்கள் : .

சிக்கன் கீமா - 1/2 கிலோ 

சின்ன வெங்காயம் - 50 கிராம் 

தக்காளி - 2 

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 

பச்சை மிளகாய் - 4 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 

மல்லி தூள் - 2 டீஸ்பூன் 

தயிர் - 1 கப் கொத்தமல்லி - சிறிதளவு 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு 

பட்டை, கிராம், ஏலக்காய் - சிறிதளவு 

செய்முறை : . 

சப்பாத்திக்கு அருமையான சிக்கன் கீமா செய்வது எப்படி?
சிக்கன் கீமாவை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும். 

சுவையான கேழ்வரகு கிரிஸ்பி லட்டு செய்வது எப்படி?

தக்காளி குழைய வதங்கிய பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள் தயிர் சேர்த்து கிளறி விடவும். அடுத்து அதில் சிக்கனை சேர்த்து கிண்டி விட்டு மூடி போட்டு வேக விடவும்.

அடுத்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். ஒரு 15 நிமிடங்களுக்கு நீர் வற்றி திக்கான பதம் வந்ததும் சிறிதளவு கொத்தமல்லி போட்டு அடுப்பை அணைத்து விடவும்.

இப்பொழுது நமக்கு சுவையான சிக்கன் கீமா ரெசிபி ரெடியாகி விட்டது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)