சாப்பிட்டவுடன் ஜீரணத்துக்கு உகந்ததா ஸ்வீட் பீடா?





சாப்பிட்டவுடன் ஜீரணத்துக்கு உகந்ததா ஸ்வீட் பீடா?

0

உப்பு இல்லாத சாம்பாரா...? தாம்பூலம் தரிக்காத கல்யாணமா? காலம் காலமாக வழக்கத்தில் உள்ள சொலவடை இது. 

சாப்பிட்டவுடன் ஜீரணத்துக்கு உகந்ததா ஸ்வீட் பீடா?
ருசியாக வயிறு நிரம்பச் சாப்பிட்டு, சுண்ணாம்பு தடவிய வெற்றிலையுடன், பாக்கு, சீவலை வைத்து மடித்து வாயில் போட்டு மென்று, வாய் சிவக்கவும், உண்ட உணவு செரிக்கவும் மகிழ்ந்திருந்த காலம் இன்று மறைந்தே போய் விட்டது.   

வெற்றிலை போட்டால் உணவு செரிக்கும் என்ற நமது பாட்டி வைத்தியம், இன்னும் சில காலங்களில் பழங்கதையாகி விடலாம். 

கடைகளில், கொழுந்து வெற்றிலையும், கொட்டபாக்கும் கூட கிடைக்காமல் போகலாம். நம் ஊர் வெற்றிலை பாக்கின் இடத்தை தற்போது கைப்பற்றியிருப்பது வட மாநில இறக்குமதியான பீடாதான்.

குள்ளமாக இருந்தால் உடல் எடையைக் குறைக்க முடியாது ஏன் தெரியுமா?

ரஜினிகாந்த் பீடா, ஸ்டூடண்ட்ஸ் பீடா என்று வித்தியாசமான பெயர்களிலும் பீடாக்கள் வலம் வருகின்றன. இவற்றில் சில பொருட்கள் ரகசியமாகவும் சேர்க்கப் படுகின்றன. 

இது பற்றி கோவையைச் சேர்ந்த பீடா ஸ்டால் உரிமையாளர் ஜி.ஆர்.சிங்கிடம் பேசினோம். பட்டர், ஸ்வீட், குல்கந்த், சுபாரி என பீடாக்களில் பலவகை உள்ளன. 

சுப நிகழ்ச்சிகளில் நாம் மெல்லும் ஸ்வீட் பீடாக்கள் வெற்றிலை, சீவல், ஏலக்காய், கிராம்பு, பதப்படுத்தப்பட்ட தேங்காய்த் துருவல், உலர் பழங்கள் மற்றும் தேன் ஆகியவை கொண்டு தயாரிக்க படுகிறது. 

இதில் உடலுக்கு தீங்கு தரும் எந்தவகை பொருட்களும் இல்லை. வாடிக்கையாளரின் கண் முன்னரே தயாரித்துத் தருகிறோம். 

சாப்பிட்டவுடன் ஜீரணத்துக்கு உகந்ததா ஸ்வீட் பீடா?
பீடா சுபாரி, புகையிலை தூள் மற்றும் பாக்கு போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப் படுகிறது. இந்தக் கலவை கடைக்குக் கடை தயாரிப்பவர்களை பொருத்து மாறுபடும். 

இளைஞர்கள் அதிகம் வாங்கி செல்வது பீடா சுபாரியைத் தான். பான் மசாலா பீடாக்கள் தற்போது தடை செய்யப்பட்டு விட்டதால், அது  விற்கபடுவ தில்லை என்றார்.

பீடாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனையின் வயிறு மற்றும் குடல் சிறப்பு மருத்துவர் முருகேஷிடம் கேட்டோம்.  

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்கு, நமது உடலிலேயே தேவையான அமிலம் சுரக்கிறது. ஆனால், பீடா நமது உணவு செரிமானத்துக்கு இடையூறு தான். 

உங்கள் புருவங்கள் அடர்த்தியாக?

பீடா, பாக்கு போன்றவற்றை  உண்ணும் போது, செரிமானத்துக்கான அமில உற்பத்தியும் குறைய வாய்ப்புள்ளது. 

இவற்றைத் தொடர்ந்து மெல்லும் போதும், வாய்க்குள் வைத்துச் சுவைக்கும் போதும் வாயின் உட்புறச் செல்கள் பாதிப்படைகின்றன. 

இது வாய்ப்புற்று நோய் வர முக்கிய காரணம். பாக்கு, புகையிலை முதல் நிலை கேசினோஜென்களில் ஒன்று. இது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. பீடா மெல்வதைக் கைவிடுதல் மட்டுமே புற்று நோயிலிருந்து தப்பிக்க ஒரே வழி என்கிறார்.

ஸ்வீட் பீடா ஆரோக்கியமானதா?

சாப்பிட்டவுடன் ஜீரணத்துக்கு உகந்ததா ஸ்வீட் பீடா?

ஸ்வீட் பீடாவில் கலோரிகள் மிக அதிகம். என்றாவது ஒருநாள் ஒரு மாறுதலுக்கு ஸ்வீட் பீடா சாப்பிடுவதில் தவறில்லை. சாப்பாட்டுக்குப் பிறகு அது வாயில் ஏற்படுத்தும் நல்ல மணமும் ருசியும் அலாதியானது. 

ஆனால், ஸ்வீட் பீடாவை அடிக்கடியோ, தினமுமோ சாப்பிடுவது சரியானதல்ல. சாப்பாட்டுக்குப் பிறகு வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்தது. 

செரிமானத்துக்காக அவர்கள் அந்தப் பழக்கத்தைப் பின்பற்றினார்கள். பிரசவமான பெண்களுக்கு முதல் 40 நாள்கள் வரை வெற்றிலை கொடுப்பது இப்போதும் வழக்கத்தில் இருக்கிறது. 

ஆண்களே உங்கள் மச்சபலன் பற்றி அறிய ஆவலா? 

குழந்தை பெற்ற பெண்களின் உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்கச் செய்வதற்கான விஷயமாக அது செய்யப் படுகிறது.

ஆனால், சமீபகாலத்தில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு காம்பினேஷனின் அளவு சரியாகப் பின்பற்றப் படுவதில்லை. 

இந்த மூன்றில் எதன் அளவு அதிகமானாலும் அது உணவுக் குழாயில் எரிச்சலையும் வாய்ப்புண்ணையும் ஏற்படுத்தி விடும். வெற்றிலை நல்லது தான் என்றாலும் தினமும் எடுப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)