சிக்கன் சமைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்?





சிக்கன் சமைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்?

0

அசைவ உணவை விரும்புபவர்களால் சிக்கன் இன்றி ஒரு போதும் வாழ முடியாது. உலகம் முழுக்க அதிகளவு மக்களால் விரும்பி உண்ணப்படும் அசைவ உணவாக சிக்கன் இருக்கிறது. 

சிக்கன் சமைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்?
சிக்கனை சரியாக சமைத்தால் மட்டுமே அது மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். சிக்கனை சரியாக சமைக்கா விட்டாலோ அல்லது அதிகமாக சமைத்தாலோ அதனை சாப்பிட முடியாது. 

சிக்கனை அதிகமாக வேக வைத்தால் அது ரப்பர் போல மாறிவிடும், எனவே அதனை சரியாக சமைக்க வேண்டும். 

சிக்கனை வாங்கும் போது முதல் சமைக்கும் போது வரை தவிர்க்க வேண்டிய சில தவறுகள் உள்ளன. இல்லை யெனில் உங்களால் சிக்கனை சரியாக சமைக்கவே முடியாது.

செல்ஃபி மோகம் மனநோய்க்கு ஆளாகும் செல்போன் பிரியர்கள் !

சிக்கனில் எலும்பை புறக்கணிப்பது

சிக்கனில் உள்ள தொடைப் பகுதிகள் அதிக கொழுப்பு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன. அவை சமைக்கும் போது கரைவதால் கோழியின் ஈரப்பதத்தை தக்க வைத்து, அதே நேரத்தில் அதிக சுவையையும் தருகிறது. 

எனவே அதை தவிர்க்க வேண்டாம் மற்றும் எலும்பில்லாத கோழி துண்டுகளை விட எலும்புள்ள சிக்கனை வாங்கவும்.

உறைய வைக்கப்பட்ட சிக்கனை வாங்குதல்

சிக்கன் சமைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்?

ப்ரெஷான சிக்கனை சமைக்கும் போது மட்டுமே நாம் சுவையான சிக்கனை பெறலாம். 

ஆனால் உறைய வைக்கப்பட்ட சிக்கனை சமைத்தால் அது ரப்பர் போல மாறி மோசமான சுவையைக் கொடுக்கும். எனவே எப்போதும் ப்ரெஷான கோழியை வாங்கி சமைக்கவும்.

இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதற்கு காரணம் ?

சிக்கனைக் கழுவுதல்

சமைப்பதற்கு முன் சிக்கனைக் கழுவுவது ஒரு அடிப்படை சுகாதார நடைமுறையாகும். சிக்கனைக் கழுவுவது அதிலுள்ள பாக்டீரியாக்களை விரட்டுவதாக நம்பப்படுகிறது. 

ஆனால் ஆய்வுகள் வேறு விதமாகக் கூறுகிறது. கோழிகளை கழுவிய பின் மேற்பரப்புகளை திறம்பட சுத்தம் செய்து சுத்தப்படுத்தாத போது பாக்டீரியா எளிதாக பரவும். கோழியை கழுவுவது 

அல்லது ஊற வைப்பது அதிலுள்ள பாக்டீரியாவை அழிக்காது. சமைக்கும் போது மட்டுமே அதிலுள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.

ப்ரைனிங் அல்லது மரினேட்டிங்

சிக்கன் சமைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்?

பெரும்பாலான மக்கள் சிக்கனை சமைக்கும் போது அவசரத்தில் முக்கியமான விஷயத்தை மறந்து விடுகிறோம். ப்ரைனிங் என்பது கோழியை சமைப்பதற்கு முன் உப்பு நீரில் ஊற வைத்து ஒரு துளி சர்க்கரை சேர்ப்பதைத் தடுக்கிறது. 

இது சிக்கன் அதிகமாக சமைக்கப் படுவதைத் தடுக்கவும் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகிறது. 

மேலும், சிக்கன் மிகவும் சுவையாக இருக்க வேண்டுமெனில், சில மசாலாப் பொருட்கள், தயிர், எலுமிச்சை சாறு அல்லது பிற பொருட்களைக் கொண்டு ஊறவைத்து அதற்குப்பின் சாப்பிட வேண்டும்.

நீரிழிவு நோயினை ஆரம்பத்திலேயே இனம் காண்பது எவ்வாறு?

தோலை நீக்குதல்

சிக்கன் மசாலாவை பார்ப்பதற்கு க்ரீம் போல இருப்பதை அனைவரும் விரும்புவார்கள். உங்கள் சிக்கன் பார்க்கும் போதே பசியைத் தூண்டும் விதத்தில் இருக்க தோலுடன் சமைக்க வேண்டும். 

தோல் இறைச்சியின் ஈரப்பதத்தை தக்க வைத்து, கோழியை வெளியில் மிருதுவாகவும், உள்ளே மென்மையாகவும் மாற்றும்.

வெவ்வேறு அளவுகளில் துண்டுகள் இருப்பது

உங்கள் கோழியை சமமான துண்டுகளாக வெட்டுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால் அவை அனைத்தும் ஒரே மாதிரியாக ஒரே நேரத்தில் சமைக்கப்படும். 

மேலும் அடுப்பிலிருந்து கடாயை எப்போது எடுக்க வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

மூடி வைக்காமல் சமைப்பது

சிக்கன் சமைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்?

சிக்கனை சமைக்கும் போது பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். மூடி வைத்து சமைக்கும் போது வெளிப்படும் நீராவி இறைச்சிக்கு ஈரப்பதத்தை அளிக்கும். 
நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள் - எதற்காக? எங்கு நடந்தது தெரியுமா?

இதனால் வெப்பத்தின் காரணமாக அது வறண்டு போகாது, மேலும் சுவையாகவும் இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)