சமைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள் !





சமைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள் !

0

உணவு தான் நாம் சாப்பிடும் தினசரி மருந்து மாத்திரை எனலாம். அதை தினசரி சரியான எடுத்துக் கொண்டாலே மருத்துவ மனைகள் இருக்கும் இடங்களையே மறந்து விடலாம். 

சமைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள் !

மருத்துவர் கொடுக்கும் மாத்திரைகளை எப்படி கவனமாக சாப்பிடுகிறோமோ அதே போல் சாப்பிடும் உணவையும் கவனமாக சமைத்து சாப்பிட வேண்டும். 

இல்லை யெனில் அதுவே விஷமாகவும் மாறும். அப்படி எதில் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

கோழி இறைச்சியை அலசும் போது கிச்சன் சிங்கில் கழுவுவதை தவிருங்கள். அவ்வாறு கழுவது தான் வழி என்றால் அந்த தண்ணீர் தெறிக்காமல் நேரடியாக பைப்பில் செல்வது போல் கழுவி ஊற்றுங்கள். 

ஆப்பிள் செலரி ஜூஸ் செய்வது எப்படி?

ஏனெனில் இறைச்சியில் இருக்கும் பாக்டீரியாவானது பரவும் தன்மை கொண்டது. இது ஆபத்தானது. காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கி சமைக்காதீர்கள். 

அதிக நேரம் வேகவும் வைக்கக் கூடாது. இந்த இரண்டு முறைகளும் காய்கறிகளின் சத்துகளைக் குறைத்து விடும். மோர் குழம்பை சமைத்தவுடன் மூடி வைக்காதீர்கள். ஆறிய பின் மூடுவது நல்லது.

எந்த உணவுப் பொருளை சமைக்க பயன்படுத்தினாலும் கழுவாமல் பயன்படுத்தாதீர்கள். அது காய்கறி மட்டுமல்ல புளி, பருப்பு எதுவாக இருந்தாலும் ஒரு அலசலுக்கு பின் பயன்படுத்துங்கள்.

காஃபி போடும் போது காஃபி  தூள் சர்க்கரை சரியான அளவு போட்டாலும் ருசியாக இல்லை, என்றால் கொதிக்க வைத்த பாலில் தான் பிரச்னை. 

சமைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள் !

காஃபி போடும் போது பாலை நன்கு சுண்டுவது போல் காய்ச்சாமல் நல்ல கொதி வந்ததும் இறக்கி காஃபி போட்டால் ருசியும் , மணமும் ஆளை தூக்கும்.

வாழைப்பழம் மற்றும் உருளைக்கிழங்கை ஒன்றாக வைக்கக் கூடாது. சூடுபடுத்திய உணவை உடனே ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள். ஆறிய பின் பயன்படுத்தவும். 

அதே போல் ஃபிரிட்ஜ்ஜில் வைத்த பொருளையும் உடனே சூடு செய்யாதீர்கள். குளுமை போனதும் சூடுபடுத்துவது நல்லது. இஞ்சியை டீயில் கொதிக்க வைத்தாலும் சரி..சமைக்கும் போதும் சரி தோலோடு போடுவது தவறு.

தக்காளி மீன் வறுவல் செய்வது எப்படி?

காய்கறி மற்றும் பழங்களை நறுக்கி நீண்ட நேரம் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் அதன் உயிர்த் தன்மையை இழந்து விடும். 

குழம்பு, பொறியல் என எது சமைத்தாலும் கொதிக்கும் போதே கொத்தமல்லி தழைகளை போடாதீர்கள். அடுப்பை அனைத்து இறக்கிய பின் கொதிப்பது குறைந்ததும் கொத்த மல்லியை தூவுவது நல்லது.

நீண்ட நேரம் எண்ணெய்யில் பொறித்த உணவுகளை சாப்பிடுவதும், சமைப்பதும் மிகவும் தவறு. அவ்வாறு செய்வதால் காய்கறி, இறைச்சியின் சத்துகள் நீங்கி எண்ணெய்யின் கொழுப்புதான் அதிகமாக இருக்கும். 

இப்படி சாப்பிடுவது இதய நோய்தான் வரும். தற்போது மாடுலர் கிச்சன்களின் ஸ்டீல், அலுமினிய பாத்திர பயன்பாடு குரைந்து நான் ஸ்டிக் பேன் தான் அதிகமாக பயன்படுத்தப் படுகிறது. 

சமைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள் !

எனவே அதில் உணவுகளை வறுப்பதோ, அதிகமாக் தவாவை சூடுபடுத்தி சமைப்பத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கெடுதல். சூடாக இருக்கும் எந்த உணவிலும் எலுமிச்சை பழ சாறை பிழியவே கூடாது.

இறைச்சியை ருசிக்காக அதிக வெப்பத்தில் கிரில்லிங் செய்து சாப்பிடுவது தவறு. அதன் ஊட்டச்சத்து குறைந்து புற்றுநோயை உண்டாக்கும். 

ஏனெனில் இறைச்சியில் கிரில் செய்யும் போது அதில் இருக்கும் ஹெடிரியோசைக்ளிக் அமைன்ஸ் (heterocyclic amines) என்னும் வேதிப்பொருள் உருவாகிறது. அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் !

மிஞ்சிய உணவுகளை பிளாஸ்டிக் பாத்திரத்தில் அடைப்பது, சூடான உணவை பிளாஸ்டிக் பாத்திரத்தில் கொட்டுவது, ஃபிரிஞ்சில் பிளாஸ்டிக் பொருட்களில் உணவுகளை வைப்பது என உணவுக்கு எங்கும், எதிலும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)