தினமும் கருவாடு சாப்பிடலாமா? நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்குமா?

தினமும் கருவாடு சாப்பிடலாமா? நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்குமா?

0

அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு மீன் மற்றும் கருவாடு தான். இது வாத ஓட்டம், பித்த ஓட்டம், ரத்த ஓட்டம் போன்றவற்றினைச் சரிசெய்வதாக உள்ளது. 

தினமும் கருவாடு சாப்பிடலாமா? நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்குமா?

மேலும் சளித் தொல்லை, இருமல் பிரச்சினை உள்ளவர்கள் கருவாட்டுச் சாறினை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கருவாட்டை ஊறுகாய் சாப்பிடுவது போல மிக்குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

உப்பு அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைத் தொடாமல் இருப்பது நல்லது. 

இது ஆதிகாலத்தில் மின்சாரம், குளிர்சாதன வசதி போன்றவை இல்லாத காலத்தில் உணவை பராமரித்து உண்ண பயன்படுத்தப்பட்ட டெக்னிக்குகள்.

உஷ்ணம் நீக்கும் கேப்பை கூழ் !

தற்சமயம் இதற்கு பல வசதிகள் இருப்பதால் இவற்றை தவிர்த்து மீன்களாகவே சாப்பிட்டால் உடம்பிற்கு தேவையான சத்துக்கள் அதிகம் கிடைக்கும். 

தேவையில்லாத பாக்டீரியாக்கள் நம் உடம்பில் செல்லாது. அஜீரணக் கோளாருகளையும் தவிர்க்கலாம்.

உடம்பில் உப்பின் அளவு அதிகரிப்பதால் இரத்த அழுத்தம், அதைத் தொடர்ந்து நம்முடைய சுத்திகரிப்பு நிறுவனமான கிட்னியின் வேலைப்பழு அதிகமாவதால் கிட்னி வேலை செய்யாமல் போவது, தொடர்ந்து இரத்த சர்க்கரையை கூட்டல் போன்ற உபாதைகள் வரலாம்.

வாரம் ஒரு நாள், மாதம் ஒரு நாள் என்பது நம் ஆரோக்கியத்தை தக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)