சுவையான பிரட் சீஸ் பக்கோடா செய்வது எப்படி?

0

பிரட் சீஸ் பக்கோடா ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டி. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான சிற்றுண்டிகளை கொடுப்பதற்கு பதிலாக இம்மாதிரியான வித்தியாசமான 

சுவையான பிரட் சீஸ் பக்கோடா செய்வது எப்படி?
உணவு வகையை சமைத்து இம்மாதிரியான சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு விதவிதமான உணவுகள் செய்து கொடுக்க ரொம்பவே சிரமமாக இருக்கும். 

பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு என்னடா ஸ்னாக்ஸ் வகைகள் செய்து வைப்பது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, பத்து நிமிடத்தில் சூப்பரான டேஸ்டியான பிரட் ச்சீஸ் பக்கோடா இப்படி செஞ்சு பாருங்க, 

அவங்க வேண்டாம் என்று சொல்லாமல் தட்டில் இருக்கும் மொத்தத்தையும் காலி பண்ணிடுவாங்க, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரட் சீஸ் பக்கோடா விரும்பி உண்பர். 

அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் : .

பிரட் - 8  

சீஸ் - 1 cup 

வெங்காயத்தாழ்  - 2 

பச்சை மிளகாய்  - 1½ cup 

கடலை மாவு - தேவையான அளவு 

சோடா உப்பு - தேவையான அளவு   

மிளகாய் தூள் - ½ tsp   

மஞ்சள் தூள் - ¼ tsp  

பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு 

தண்ணீர் - தேவையான அளவு  

உப்பு - தேவையான அளவு 

பஸ்கள் நீண்ட நாட்கள் இயங்காமலிருந்தால் இன்ஜின்கள் பாதிக்கும் - எச்சரிக்கை ! 

செய்முறை : .  

சுவையான பிரட் சீஸ் பக்கோடா செய்வது எப்படி?

பிரட் சீஸ் பக்கோடா செய்ய முதலில் சீஸ், நறுக்கிய வெங்காயத் தாழ், நறுக்கிய பச்சை மிளகாய் , தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, சோடா உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகிவற்றை தண்ணீர் சேர்த்து மாவாக கரைத்துக் கொள்ளவும்.  

ஒரு தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிரட் ஸ்லைஸ்களை லேசாக ரோஸ்ட் செய்யவும்.  

ஜோதிகாவுக்கு எதிர்ப்பு - கோயில்களுக்கு ஏன் செலவு செய்றீங்க?

பிரட் ஸ்லைஸ்கள் ஆறியதும் அவற்றை இரண்டாக வெட்டவும், சீஸ் கலவையை பிரட் துண்டுகளின் நடுவே வைத்து, மாவு கலவையில் தோய்த்து பொரித்தெடுத்தால் சுவையான பிரட் சீஸ் பக்கோடா தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)