Recent

featured/random

உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம்... விலை என்ன தெரியுமா?

0

உலகின் விலை உயர்ந்த கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற ஐஸ்கிரீம் ஜப்பாளில் தயாரிக்கப் படுகிறது. நம்மில் ஐஸ்கிரீம் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா என்ன? 

உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம்... விலை என்ன தெரியுமா?
குளுகுளுன்னு வாயில் வைத்தவுடன் கரைந்து விடும் ஐஸ்கிரீம்களுக்கு எப்போதும் ஒரு தனிமவுசு இருக்கதான் செய்கிறது.

ஸ்கிரீம் என்று நினைத்தவுடன் வாயில் தொடங்கி வயிறு வரை குளிர்ச்சி மட்டும் இல்லை கொண்டாட்டமும் சேர்த்தே தொடங்கி விடுகிறது என்று தான் சொல்ல வேண்டும். 

தூங்கி எழுந்த பின்னரும் களைப்பாக உணர்கிறீர்களா?

அதிலும் இந்தக் கோடை வெப்பத்தில் ஜில்லென்று ஒரு ஐஸ்கிரீம் என்றால் கேட்கவா வேண்டும். அதிலும் ஐஸ்கிரீம்க்கு உள்ள தனி சிறப்புப என்ன வென்றால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் விருப்பமானது. 

இன்றும் ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது அனைவரும் உற்சாகத்தில் குதித்து குழந்தைகளாகவே மாறி விடுவதை பார்க்க முடிகிறது அல்லவா. 

கோடையை சமாளிக்க ஒரு புறம் பழங்கள் வரிசை கட்டி நின்றாலும் அதில் ஐஸ்கிரீமைகளுக்கு ஒரு குட்டி மதிப்பு இருப்பதை மறுப்பதற்கு இல்லை. 

ஆனால் ஐஸ்கிரீம் களில் விலை என்பது அவரவர் தேர்வு செய்வதை பொறுத்து மாறுபடுகிறது. ஆனால் இதுவரை 5 லட்சத்திற்கு ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் ஐஸ்கிரீம் பற்றி கேள்வி பட்டுருக்கிறீர்களா?

உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம் ஜப்பானில் விற்பனை செய்யப் படுகிறது. இந்த ஒரு ஐஸ்கிரீம் இந்திய ரூபாயின் மதிப்பில் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது.

செல்லாடோ (Cellato) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ஐஸ்கிரீமில் அரிதான வகை பொருட்கள் சேர்க்கப் படுகின்றன. 

இல் தங்கத் துகள்கள், வெள்ளை ட்ரபுல் (truffle) என்ற பொருளையும் சேர்ப்பதால் தான் இந்த ஐஸ்கிரீமுக்கு இவ்வளவு விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

நம்மை மிகவும் சோம்பேறியாக்கும் உணவுகள் !
மேலும் பார்மிஜானோ ரிஸ்னோ (Parmigiano Reggiano) என்ற அரிதான வகை சீஸ் (cheese) -ம் இந்த ஐஸ்கிரீமில் சேர்க்கப் பட்டுள்ளது. இதனால் இன்று காண்பவர்களின் மனதை மயக்கும் வாசனையில், தனித்துவமனான சுவையில் இந்த ஐஸ்கிரீம் உள்ளது.

ஒன்றரை வருட முயற்சிக்கு பிறகே இந்த ஐஸ்கிரீமை உருவாக்கி யுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலகின் விலை உயர்ந்த இந்த ஐஸ்கிரீம் தற்போது கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !