Recent

featured/random

புளியம் பழத்தில் இருக்கும் மருத்துவ பயன்கள் என்ன?

0

சுவையான புளியம் பழத்தில் நிரம்பியிருக்கும் ஆரோக்கியமான மருத்துவ நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள். புளியம்பழம் என்று நினைத்தாலே நாவில் எச்சில் ஊறும். 

புளியம்பழத்தில் இருக்கும் மருத்துவ பயன்கள் என்ன?
அதில் சுவை மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கியமான மருத்துவப் பலன்களும் அடங்கி யுள்ளன. அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் புளி. 

சுவைக்காக பயன்படுத்தப்படும் இந்தப் புளியில் சத்துக்களும் மருத்துவப் பயன்களும் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

புளியமரம் இந்தியா முழுவதிலும் வெட்ட வெளிப்பிரதேசங்களிலும், தென்னிந்தியாவிலும், இமயமலைப் பகுதிகளிலும் இயற்கையாக வளர்க்கப்படுகிறது.

நல்ல கொழுப்பை அதிகரிக்கும் வழிகள் !

புளிவிதையின் பருப்பு, கனிகள், தண்டுப் பட்டை மற்றும் இலைகள் மருத்துவப் பயன் கொண்டவை. விதையின் பருப்பில் பாலசாக்கரைடுகள் உள்ளன. 

பாலசமைன், கட்டிக்கின், நாஸ்டர்ஷியம் டமரின், ஃபாஸ்ஃபாட்டிக் அமிலம், எத்தனாலமைன், செரீன் ஐனோசிட்டால், மற்றும் ஹார்டனைன் என்னும் இரசாயனப் பொருட்கள் உள்ளன. 

வைட்டமின் ஏ, பி, ரிபோஃப்ளோவின், நியாசின், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், கொழுப்புசத்து, கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

செரிமான ஆற்றல் பெருகும்

புளியம்பழத்தில் இருக்கும் மருத்துவ பயன்கள் என்ன?

புளியானது குளுமை அகற்றி, வாய்வு அகற்றி, மலமிளக்கி, துவர்ப்பி, ஊக்கமூட்டி. விதையின் பருப்பு பாலுடன் கலந்து பேதி மருந்தாக பயன்படும். ஊக்கமூட்டும். 

கனிந்த புளியம் பழம் வயிற்றுப் பூச்சிகளை அகற்றும், அஜீரணத்தைப் போக்கும் மிதமான பேதி மருந்தாகும். உடலைக் குளிரச் செய்யும். கல்லீரலுக்கு நன்மருந்து. 

இலைகளின் சாறு ரத்த மூலத்துக்கும் சிறுநீர் கழித்தலின் போது ஏற்படும் வலியையும் குணப்படுத்தும். தண்டுப் பட்டை துவர்ப்புள்ளது. காய்ச்சலைப் போக்கும்.

அயிலை மீன் நாட்டு குழம்பு செய்வது எப்படி? 

புளியம்பழம் உடல் வெப்பத்தை ஏற்படுத்தும், வாதம் தொடர்பான வியாதிகளைத் தணித்துக் குணப்படுத்தும். புளியம் பழத்தின் வெப்ப ஆற்றல் 82 கலோரியாகும். 

புளியம்பழத்தில் பழைய புளி, புதிய புளி என்ற இரண்டு வகை உண்டு. இருவகைப் புளியின் குணமும் ஒன்றே என்றாலும் புதுப்புளியை விட பழைய புளிக்கே வீரியம் அதிகம். 

சூலை தொடர்பான வியாதிகளைக் குணமாக்கும். அதிக அளவு புளியை சாப்பிட்டால் ரத்தம் சுண்டும்.

நச்சு நீங்கும்

புளியம் பழத்தில் இருக்கும் மருத்துவ பயன்கள் என்ன?

தேள் கடித்தவருக்கு புளியம் பழம் மருந்தாக செயல்படுகிறது. கலாக்காய் அளவு நார் இல்லாத புளியம் பழத்தை எடுத்துக் கொண்டு அதே அளவு காரம் உள்ள சுண்ணாம்புடன் சேர்த்து இரண்டையும் நன்றாக அழுத்திப் பிசைந்தால் உடனே அது சூடேறும். 

சூடு ஆறும் முன் அதை அடையாக எடுத்து தேள் நச்சு உள்ள இடத்தில் வைத்து அழுத்த வேண்டும். இந்த மருந்து அப்படியே ஒட்டிக் கொள்ளும். நச்சு புளியம் பழத்தில் ஏறியவுடன் கடுப்பு நின்று விடும். படிப்படியாக குணமடையும்.

பேலியோ டயட் நல்லதும் கெட்டதும் அறிந்துகொள்ள !

ரத்தக் கட்டு அகற்றும்

உடலில் எங்காவது அடிபட்டு ரத்தம் கட்டி வீக்கம் ஏற்பட்டால் புளியை ஒரு அளவு எடுத்து அதே அளவிற்கு உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து அதை சுண்டக்குழம்பு போல கரைத்து எடுத்து 

வடிகட்டி ஒரு இரும்புக் கரண்டியில் விட்டு, அதை அடுப்பில் வைத்து, நன்றாக கொதிக்க வைத்து அதை தாளக்கூடிய சூட்டுடன் வீக்கத்தின் மேல் கனமாகப் பற்றுப் போட்டுவிட வேண்டும். 

தினசரி காலை, மாலை பழைய மருந்தைக் கழுவி விட்டு புதிதாகப் பற்றுப் போட வேண்டும். இந்த விதமான மூன்று நாள் பற்றுப் போட்டால் வீக்கம் வாடிவிடும். வலி தீரும்.

பல்வலி குணமாகும்

புளியம்பழத்தில் இருக்கும் மருத்துவ பயன்கள் என்ன?

பல்வலி ஏற்பட்டால் தேவையான அளவு கொஞ்சம் புளியை எடுத்து அதே அளவு உப்புத் தூளையும் எடுத்து இரண்டையும் நன்றாகப் பிசைந்து பல்லில் வலியுள்ள இடத்தில் அடையாக வைத்து அழுத்தி விட வேண்டும், 

பின் வாயை மூடிக்கொள்ள வேண்டும். வாயில் உமிழ்நீர் ஊறினால் அதை துப்பிவிட வேண்டும்.

பேலியோ டயட் உணவு முறை பலன் தரக்கூடியது?

கால் மணி நேரம் கழித்து புளியையும் துப்பி விட்டு வெது வெதுப்பான வெந்நீர் கொண்டு வாயை பலமுறை கொப்பளிக்க பல்வலி குணமாகும். தினசரி காலை, மாலை தேவையானால் மதியம் கூட இந்த முறையை கையாளலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !