ஸ்ட்ராபெர்ரி பேஸ் பேக் சருமத்தில் ஏற்படுத்தும் மாற்றம் !





ஸ்ட்ராபெர்ரி பேஸ் பேக் சருமத்தில் ஏற்படுத்தும் மாற்றம் !

0

ஸ்ட்ராபெர்ரி அனைத்து விதமான சருமங்களுக்கும் அளவிட முடியாத நன்மைகளை தருகிறது. சருமத் துளைகளில் அடங்கி யிருக்கும் அழுக்குகளை வெளியேற்றவும், முகத்தை சுத்தப் படுத்தவும் சிறப்பாக செயல்படுகிறது. 

ஸ்ட்ராபெர்ரி பேஸ் பேக் சருமத்தில் ஏற்படுத்தும் மாற்றம் !
இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. சருமத்தைச் சுத்தப் படுத்தும். அழகுச் சாதனப் பொருள் தயாரிப்பில் இப்பழங்களின் மணமும், குணமும் உபயோகிக்கப் படுகின்றன. 

பருவப் பெண்கள் பரு மற்றும் வடுக்களைத் தடுக்க தங்கள் உணவில் இப்பழங்களைச் சேர்த்துக் கொள்ளுதல் நலம் பயக்கும். சருமத்தை இலேசாக வெளுக்கச் செய்யும் தன்மை இப்பழங்களுக்கு உண்டு. 

அதனால் முகத்திலுள்ள பருக்களின் வடுக்களை விரைவில் மறையச் செய்யும் குணம் கொண்டது. வெயிலினால் ஏற்படும் சருமப் பராமரிப்பி லிருந்தும், சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும். 

ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் சாலிசிலிக் அமிலமானது முகப்பருக்களை நீக்க உதவுகிறது. இறந்த செல்கள் முகத்தில் தேங்கி யிருக்கும் போது முகத்தின் பளபளப்பு குறைகிறது. 

இந்த இறந்த செல்களை நீக்க உதவுகிறது. கொலாஜன் உற்பத்தி குறைவால் சருமத்தில் சுருக்கங்களும் இளவயதில் முதுமை தோற்றமும் உண்டாகிறது. இந்த கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் ஸ்ட்ராபெர்ரி பயன்படுகிறது. 

அழகான நிறத்தை கொண்டிருக்கும் ஸ்ட்ராபெர்ரி வைட்டமின் சி சத்து நிறைந்தது. இவற்றில் இருக்கும் ஒமேகா 3 கூடுதலாக சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி முகத்தை பொலிவாக வைக்க உதவுகிறது. 

ஸ்ட்ராபெர்ரி, தயிர், தேன் மூன்றையும் சமஅளவில் எடுத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் முகம் கழுவவும், இவை முகப்பருவை குறைப்பதோடு முகத்தையும் பொலிவாக்க உதவும். 

மூல நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது?

வாரம் ஒருமுறை இந்த பேக் போடுவதன் மூலம் முகப்பருக்களை விரைவாக குறைக்க முடியும். 

ஸ்ட்ராபெர்ரி மசித்தது 2 டீஸ்பூன், 

கற்றாழை ஜெல் 1 டீஸ்பூன், 

பாலேடு 1 டீஸ்பூன் 

எடுத்து மூன்றையும் நன்றாக கலந்து குழைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவுங்கள். பிறகு இலேசாக மசாஜ் செய்து விடவும். 20 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். 

மூன்று நாட்களுக்கு ஒருமுறை இதை செய்யலாம். கற்றாழை ஜெல் முகத்தில் இருக்கும் வறட்சியை தடுத்து எண்ணெய் பசை இல்லாமல் சருமத்தை பொலிவாக வைக்க உதவுகிறது. 

ஸ்ட்ராபெர்ரி பேஸ் பேக் சருமத்தில் ஏற்படுத்தும் மாற்றம் !

கற்றாழை பயன் படுத்துவதால் அவை சருமத் துளைகளை அடைக்காமல் முகத்தை சுத்தம் செய்து வெளியேறும். சருமத்தில் கரும்புள்ளிகள். பருக்களால் வடு போன்ற வற்றையும் மறைய செய்யக் கூடியது. 

இதனோடு ஸ்ட்ராபெர்ரி கலந்து சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. 

ஸ்ட்ராபெர்ரியை மசித்து எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை காத்திருந்து வெது வெதுப்பான நீரை கொண்டு கழுவினால் எண்ணெய் பசை கட்டுக்குள் வரும்.

சுவையான செட்டிநாடு வெஜிடபிள் குருமா செய்வது எப்படி?

இது அதிகப் படியான எண்ணெயை நீக்குவதோடு சருமத்தையும் சுத்தம் செய்து இயற்கை ப்ளீச் போல் சருமத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)