சுவையான சாமை கட்லெட் செய்வது எப்படி?





சுவையான சாமை கட்லெட் செய்வது எப்படி?

0
தற்போது பலரும் தங்கள் உணவுகளில் சிறு தானியங்களை அதிகம் உணவில் சேர்த்து வருகிறார்கள். சிறு தானியங்களைக் கொண்டு வெறும் உப்புமா, கஞ்சி மட்டும் தான் செய்ய முடியும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. 
சுவையான சாமை கட்லெட் செய்வது எப்படி?
சிறு தானியங்களைக் கொண்டு பல சுவையான ஸ்நாக்ஸ்களையும் செய்யலாம். குறிப்பாக பலரும் விரும்பி சாப்பிடும் கட்லெட்டுகளை செய்து சாப்பிடலாம். 
இன்று நாம் காணவிருப்பது சிறு தானியங்களில் ஒன்றான சாமை கட்லெட் பற்றி தான். தினசரி ஒரு வேளை சாமையை உணவாக எடுக்கலாம். 

இது எல்லா வயதினருக்கும் ஏற்றவை. சுலபமாக ஜீரணிக்க கூடியவை. சிறிதளவு எடுத்து கொண்டாலும் வயிறு நிரம்ப கூடும். சாமை பழமையான உணவுகளில் ஒன்று. 

அரிசியுடன் ஒப்பிடும் போது இது அதிக நன்மைகளை வழங்குகிறது. சாமையில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகமாக உள்ளது. 

இது நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதோடு எளிய சர்க்கரை கொண்ட கார்போ ஹைட்ரேட் உணவும் கூட. சாமை கட்லெட் செய்வது மிகவும் சுலபம். 

மேலும் இது பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சாமை கட்லெட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் : .
 
சாமை - 2 கப் (வேக வைத்தது)
 
எண்ணெய் - 1 டீஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
 
சிறிய கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
 
குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
 
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
 
தக்காளி கெட்சப் - 2 டேபிள் ஸ்பூன்
 
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
 
உப்பு - சுவைக்கேற்ப
 
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

சுவையான பீட்ரூட் லோனி ஸ்பாஞ்ச் தோசை செய்வது எப்படி? 

செய்முறை : .
சுவையான சாமை கட்லெட் செய்வது எப்படி?
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், கேரட், குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
 
பின்னர் மிளகாய் தூள், கரம் மசாலா, தக்காளி கெட்சப், உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அடுத்து வேக வைத்துள்ள சாமையை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

நாகர்கோவில் வெறும் குழம்பு செய்வது எப்படி? 

பின் அதில் கொத்த மல்லியை சேர்த்து நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும். பின்பு அதை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
 
பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளைப் போட்டு எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சாமை கட்லெட் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)