6 மணி நேரத்தில்.. 350க்கும் மேற்பட்ட கிரேவி.. கோவை இளைஞர் !

0
ஆறு மணி நேரத்தில் 350 க்கும் மேற்பட்ட குழம்பு மற்றும் கிரேவி வகைகளை செய்து கோவையை சேர்ந்த சமையல்கலை நிபுணர் உலக சாதனை. கோவை கவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர் அருண் பாபு. 
6 மணி நேரத்தில்.. 350க்கும் மேற்பட்ட கிரேவி.. கோவை இளைஞர் !
இவர் தனியார் நட்சத்திர ஓட்டலில் தலைமை சமையல் கலை நிபுணராக உள்ளார். இவர் குழம்பு மற்றும் கிரேவி வகைகளை வேகமாக செய்வதில் தனித்திறமை கொண்டவர். 

இந்த நிலையில் சாதனை செய்ய விரும்பிய அருண்பாபு ஆறு மணி நேரத்தில் 350 க்கும் மேற்பட்ட குழம்பு மற்றும் கிரேவி வகைகளை செய்து சாதனை படைத்துள்ளார். 
இதில் செட்டிநாடு, சவுத் மற்றும் நார்த் இந்தியன், சைனீஸ் சைவம் மற்றும் அசைவ மல்ட்டி குஸைனாக செய்துள்ளார். 

குறிப்பாக ஒரே இடத்தில் ஹைதராபாதி, ஹன்சாய், பஞ்சாபி, மலாய், தாய், செட்டிநாடு, கேரள மலபார் என மல்ட்டி குசைனில், மட்டன், சிக்கன், மீன் மற்றும் முட்டை, இறால் கிரேவி, குழம்புகளை சமைத்துள்ளார்.
மேலும் இதே போல சைவ வகையில், பூண்டு கார குழம்பு, மிளகு மோர், சாம்பார் என 350 க்கும் மேற்பட்ட கிரேவி குழம்பு வகைகளை செய்த இவரது சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)