சுவையான மட்டன் கொத்துக்கறி அடை செய்வது எப்படி?

சுவையான மட்டன் கொத்துக்கறி அடை செய்வது எப்படி?

0
மட்டன் வெறும் சுவையையும் தாண்டி  மனிதர்களுக்கு பல்வேறு மருத்துவ பயன் தருகிறது. ஆட்டின் தலை, கால், கண், குடல் என அனைத்தும் பல்வேறு நன்மைகளை தருகிறது. 
சுவையான மட்டன் கொத்துக்கறி அடை செய்வது எப்படி?
ஆட்டிறைச்சி உண்பதால் உடலில் உள்ள நல்ல கொழுப்புக்கள், நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களை நீக்கி, கொலஸ்ட்ரால் பிரச்சனை வருவதை தடுக்கும். 
அதே போல் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆட்டிறைச்சி சாப்பிட்டால் அது ரத்தச்சோகை வராமல் தடுக்கும். 

வாரத்தில் ஒரு முறை ஆட்டிறைச்சியை சாப்பிட்டு வந்தால், அது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த செய்யும். 

இடுப்புக்கும், சிறுநீரக சுரப்பிக்கும் நல்ல வலிமை தரும். இடுப்பு வலி மற்றும் கோளாறுகளுக்கு நல்ல தீர்வளிக்கும். தாது விருத்தியாகும். ஆண் குறிக்கு வலிமை தரும்.

தினமும் தோசை, இட்லி சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? அப்போ இந்த மாறி வித்தியாசமான முறையில் மட்டன் கொத்துக்கறி அடை செய்து சாப்பிட்டு பாருங்க. நீங்களும் ட்ரை பண்ணுங்க.
தேவையான பொருட்கள் : .
 
புழுங்கல் அரிசி - 200 கிராம்
 
கடலை பருப்பு - 100 கிராம்
 
துவரம் பருப்பு - 100 கிராம்
 
பாசிப்பருப்பு - 20 கிராம்
 
ஆட்டுக்கறி கொத்தியது - 200 கிராம்
 
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
 
சீரகம் - 5
 
காய்ந்த மிளகாய் - சிறிதளவு
 
தேங்காய் - 1 துண்டு
 
இஞ்சி - சிறிதளவு
 
பூண்டு - 8 பல்
 
சின்ன வெங்காயம் - 100 கிராம்
 
கறிவேப்பிலை - சிறிதளவு
 
கொத்தமல்லி - சிறிதளவு
 
பெருங்காயம் - சிறிதளவு
 
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை : .
சுவையான மட்டன் கொத்துக்கறி அடை செய்வது எப்படி?
முதலில் கொத்தமல்லி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, தேங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

புழுங்கல் அரிசியை தனியாகவும், கடலை பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பை ஒன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.
 
அடுத்து புழுங்கல் அரிசி, பருப்புகளுடன், காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு, சேர்த்து கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். கடைசியில் மட்டன் கொத்துக்கறியை சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுக்கவும். 
பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு இத்துடன் கொத்த மல்லிதழை, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, தேங்காய், சின்ன வெங்காயம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் தோசைக் கல்லை வைத்து, அதில் எண்ணெய் தடவி மாவை அடைகளாக ஊற்றி மீண்டும் சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)