சுவையான மூவண்ண லஸ்ஸி செய்வது எப்படி?





சுவையான மூவண்ண லஸ்ஸி செய்வது எப்படி?

0
கோடை காலங்களில் லஸ்ஸிக்கான மவுசே தனி. அப்படி ஓர் ஆனந்தம், மனதுக்கு உற்சாகம், இதம் அத்தனையும் தரும். நம் சுவை நரம்புகளைத் தூண்டி,  நம்மை மெய் மறக்கச் செய்யும் சக்தி இதற்கு உண்டு.
சுவையான மூவண்ண லஸ்ஸி செய்வது எப்படி?
லஸ்ஸியில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்துக்கு தேவையான என்சைம்களை அதிகரித்து, செரிமானத்துக்கு உதவும். உடலின் ஜீரண சக்தியை பலப்படுத்தும். 
மலச்சிக்கல், வயிற்றுப் புண், வயிறு உப்புசம் உள்ளிட்ட வயிற்று உபாதைகளைச் சரியாக்கும். லஸ்ஸியில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. 

வைட்டமின் பி 12 ரத்தத்தில் உள்ள குளூக்கோஸை ஆற்றலாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் வைட்டமின் பி 12 இருப்பதால், ஒரு டம்ளர் லஸ்ஸி குடித்தால் உடனடி ஆற்றல் கிடைக்கும்.  

சரி இனி தயிர் கொண்டு சுவையான மூவண்ண லஸ்ஸி செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் : .
 
ஆரஞ்சு நிறத்திற்கு குங்குமப் பூவின் சிரப் - 2 மேசைக் கரண்டி
 
வெள்ளை நிறத்திற்கு தயிர் -3 கப்
 
பச்சை நிறத்திற்கு வெட்டிவேர் சிரப் - 2 மேசைக் கரண்டி
 
ஏலக்காய் பொடி - 1 மேசைக் கரண்டி
 
சர்க்கரை - 3 மேசைக் கரண்டி

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் அருமையான பலன்கள் ! 

செய்முறை : .
சுவையான மூவண்ண லஸ்ஸி செய்வது எப்படி?
தயிரை நன்றாக அடித்துக் கொள்ளவும். அதில் சர்க்கரை மற்றும் ஏலக்கய் பவுடரை சேர்க்கவும். மேற் கூறியவற்றை மூன்று பாகமாகப் பிரித்துக் கொள்ளவும்.
 
ஒரு பாகத்தில் குங்குமப் பூவின் சிரப்பை சேர்த்துக் கொள்ளவும். ஒன்றில் வெட்டிவேர் சிரப்பை சேர்க்கவும். ஒரு பாகத்தை அப்படியே வைத்துக் கொள்ளவும்.
நீளமான கண்ணாடி கிளாஸில் முதலில் வெட்டிவேர் சிரப் கலந்த தயிரை ஊற்றவும். அதன் மீது வெள்ளை தயிர், கடைசியாக குங்குமப்பூ தயிர் ஊற்றவும்.
 
இதன் மீது நறுக்கிய பிஸ்தாவை தூவி அலங்கரிக்கவும். ஜில்லென்று பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)