அத்திக்காய் தேவையான அளவு வாங்கி வந்து அவற்றை நான்கு துண்டுகளாக நறுக்கி அதில் உள்ள விதைப் பகுதியை சுரண்டி எடுத்து விட வேண்டும்.
அத்திக்காய் துவர்ப்பு சுவையுடையது. அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து குழம்பு வைக்கலாம்.
நொறுக்குத் தீனி என்பதே ஆரோக்கியக் கேடு !
அத்திக்காயில் பொரியல் செய்யலாம். இதில் வைட்டமின் A யும் சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்பு சத்தும் அதிக அளவில் இருக்கின்றன.
அத்திக்காயைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். வெள்ளை ஒழுக்கை நிறுத்தும். சீதபேதியை குணமாக்கும். வாயுவைப் போக்கும். இரத்த மூலத்தை குணப்படுத்தும் வல்லமை உடையது.
உடலிலுள்ள இரணங்களை ஆற்றக் கூடியது. வெட்டை நோயை குணப்படுத்தும். அத்திக்காய் வயிற்று புண்னுக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
அமர்ந்து தியானம் செய்வதற்கு இந்த அத்தி மரத்திலிருந்து பலகைகளை செய்வார்களாம். இந்த மரப்பலகைகள் தியானத்தின் சக்தியையும் மன ஒருமைப் பாட்டையும் நமக்கு அளிக்க வல்லது என்று சொல்லவார்கள்.
பாஸ்ட் புட் சாப்பிட்டால் கேன்சர் உண்டாகும் !
இந்தக் காயின் சுபாவம் குளிர்ச்சி. அத்திப் பிஞ்சினால் மூலம், வாயு, மூலக் கிராணி, வயிற்றுப்புண், ரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, ஆகிய அனைத்து விதமான பிரச்சினைகளும் குணமாகும்.
மாதம் ஒரு நாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.
இரைப்பையில் அமில மழைக்கு என்ன காரணம்?
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க, அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்)
ஒரு வாரம் வரை ஊற வைத்து, அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.
அத்திக்காயை ஊறுகாய் செய்து உண்பவர்களும் உண்டு. மலைக் கிராமங்களில் வசிப்பவர்களிடம் கேட்டால் கொண்டு வந்து தருவார்கள்.