பழனிக்கு மற்றொரு அடையாளம் பொரி உணவுகள் !





பழனிக்கு மற்றொரு அடையாளம் பொரி உணவுகள் !

0

ஒவ்வொரு உணவிற்கும் ஒவ்வொரு கதை உண்டு. சில உணவு வகைகள் வெளியே தெரிந்து பிரபலமடையும். சில உணவுகள் உள்ளூர் மக்களின் ஃபேவரைட் உணவாக இருக்கும். 

பழனிக்கு மற்றொரு அடையாளம் பொரி உணவுகள் !
அவர்கள் மட்டுமே அந்த உணவினை சுவைத்து மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். அந்த வகையில் பழனியில் பஞ்சாமிர்தத்திற்கு அடுத்து மசாலா பொரி மிகவும் பிரபலம். 

இங்கு பல வகை பொரி உணவுகளை தள்ளு வண்டிகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.

பழனிக்கு பஞ்சாமிர்தத்திற்கு அடுத்து பொரி வகைகள் சிறப்பு. இங்குள்ள மக்கள் அதிகம் ருசிக்கும் உணவுகளில் இதுவும் ஒன்று. 

அதில் மசால் பொரி, செட் பொரி, முட்டை பொரி, முட்டை செட் என பல வகைகளில் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர் அங்குள்ள தள்ளு வண்டி கடைக்காரர்கள். 

மசால் பொரி மற்றும்  செட் பொரி தானே இதில் என்ன இருக்கிறது என நினைக்கலாம். பொரி எல்லா ஊரிலும் ஒரே மாதிரி சுவையில் தானே கிடைக்கும். 

இதில் என்ன ஸ்பெஷல் என்று கேட்கலாம். எந்த ஊரில் பொரி சாப்பிட்டாலும் இருவகை மசாலாவோட கிடைக்கும் பொரி இங்கு மட்டும் தான். 

அது தான் இந்த பொரியின் ஸ்பெஷல் என்கிறார் பொரி கடை வைத்திருக்கும் செந்தில்.

நான் 40 வருடமாக பொரி கடையை பழனி பெரியநாயகி அம்மன் கோவில் அருகில் நடத்தி வருகிறேன். இந்த கடையை என்னுடைய தந்தை தான் ஆரம்பித்தார். 

சுவையான பீட்ரூட் ரைஸ் செய்வது எப்படி?

அப்போது இங்கு  தேங்காய், வாழைப்பழம் மற்றும் கோயிலுக்கு தேவையான சாமான்கள், ஊதுபத்தி சூடம் போன்ற பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்து வந்தார்.

நான் கடையை நடத்த ஆரம்பித்த பிறகு இந்த கடை மட்டுமல்லாது வேறு ஏதாவது மாற்று கொண்டு வர வேண்டும் என்பதற்காக மசால் பொரி மற்றும் மசால் செட் பொரி உணவுகளை விற்கத் தொடங்கினேன். 

பழனியில் கிடைக்கும் மசால் பொரி மற்றும் மசால் செட்டுகள் பிற ஊர்களில் கிடைக்கும் பொரிகளை விட சற்று மாறுபட்டு இருக்கும். அதற்கான காரணம் மசாலா தான்.

பிற ஊர்களில் நீங்கள் பொரி சாப்பிட்டால் ஒன்று மிளகாய் பொடி போட்டு கொடுப்பார்கள் அல்லது குழம்பு ஊத்தி பேல் பூரி செய்து கொடுப்பார்கள். 

ஆனால் பழனியில் மட்டும் இரு வகையான மசாலாக்களை நாங்களே தயார் செய்கிறோம். 

ஒரு வகை மசாலா காரமாக இருக்கும் இதை தயாரிக்க தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பீட்ரூட், மிளகாய், உப்பு போன்றவற்றை அரைத்து சட்னியாக தயாரிப்போம்.

இந்த சட்னியில் பீட்ரூட் கலப்பதால் சிவப்பாகவும், காரமாகவும் இருக்கும். இன்னொரு வகை காரமில்லாமல் பருப்பு, உருளை கிழங்கு, வெங்காயம் மற்றும் மஞ்சத்தூள் ஆகியவற்றை கலந்து தயாரிப்போம். 

இந்த வகை சட்னி இங்கு மட்டுமே செய்வதால் இந்த வகையான பொரி இங்கு மட்டுமே கிடைக்கிறது. இது போக மிச்சர், நிலக்கடலை, தட்டு முறுக்கு சேர்த்து செட் பொரி வகைகள் கொடுக்கிறோம்.

இட்லி மாவு ஒரு வாரத்திற்கு மேல் புளிக்காமல் இருக்க என்ன செய்ய வெண்டும்?

பூண்டுடன் சில பொருள்களை அரைத்து செய்வது பூண்டு பொரி. முட்டையை அவித்து அதனை சிறு சிறு துண்டுகளாக்கி 

சட்னியுடன் கலந்து தருவது முட்டை பொரி. இந்த பொரி உணவு, 1970ல் கிருஷ்ண மூர்த்தி, திருமூர்த்தி மற்றும் கண்ணன் ஆகிய மூவரால் துவங்கப்பட்டது. 

அவர்கள் தள்ளு வண்டியில் ஆரம்பித்ததால், நாங்களும் அதை அப்படியே தொடர்கிறோம். 

பழனிக்கு மற்றொரு அடையாளம் பொரி உணவுகள் !

அவர்கள் ஆரம்பித்த போதே தற்போது குறிப்பிட்ட அனைத்து  வகையான பொரி செட், முட்டை செட், முட்டை பொரி, பூண்டு பொரி, தட்டு முறுக்கு ஆகியவை விற்பனை செய்து வந்தனர்.

மக்களின் வரவேற்பை தொடர்ந்து இப்பொழுது பல பேர் இந்த தொழிலை செய்கின்றனர். 

காக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்? தெரியாத பதில் !

பொரியை தவிர அதில் கலக்கும் காராபூந்தி, தட்டு, முறுக்கு, ஓமப்பொடி இவை அனைத்தும் நாங்களே செய்வதால் தனித்த சுவையில் எங்களால் கொடுக்க முடிகிறது. 

இதில் தேவையான மசாலாக்கள் அனைத்தும் வீட்டு முறையில் தயார் செய்கிறோம் என்கிறார் செந்தில்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)