காலையில் அவசரம் அவசரமாகச் சமைப்பது, அதை விட அவசரமாகச் சாப்பிடுவது என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறோம். 

சுவையான மொறுமொறு தோசை ரெடி பிரெட் எப்படி செய்வது?

அந்த அளவுக்கு வாழ்க்கை பரபரத்துக் கிடக்கிறது. அமர்ந்து சாப்பிடக்கூட யாருக்கும் நேரமில்லை. எது கிடைக்கிறதோ அது தான் உணவு. அப்படிப் பலரும் பயன்படுத்தும் ஓர் உணவுப் பொருள், பிரெட். 

சமைக்க நேரமின்றி ஓடுபவர்கள், உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பவர்கள் எனப் பலருக்கும் பிரெட் மட்டுமே எளிதான உணவு. 

காலையில் சமைக்க நேரம் இல்லையே என கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் பிரெட் பாக்கெட் இருந்தால் உடனே இந்த அருமையான பிரெட் தோசை சுட்டுக் கொடுங்கள். 

இதன் சுவையால் வீட்டிலும் பாராட்டு மழை பொழியும். சரி இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

பிரெட் - 4 துண்டுகள்

கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

ரவை - 2 டேபிள் ஸ்பூன்

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

கேரட் - 1

மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

சுவையான மொறுமொறு தோசை ரெடி பிரெட் எப்படி செய்வது?

பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். மிகவும் பொடியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அரைத்ததும் அதை ஒரு கிண்ணத்தில் கொட்டிக் கொள்ளுங்கள்.

பின் அதில் கோதுமை மாவு, ரவை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் தயிர், தக்காளி, வெங்காயம், துருவிய கேரட், மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இப்போது தோசை ஊற்றும் பதத்திற்கு தண்ணீர் ஊற்றி அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் மாவு ரெடி. தோசைக் கல்லில் கெட்டியாக ஊற்றி தோசை போல் சுட்டு எடுங்கள். காலை உணவு தயார்.