ஆமணக்கு எண்ணெய் குறிப்பாக தலைமுடி வளர்ச்சிக்கு நல்லது என்று அறியப்படுகிறது. ஆனால் ஆமணக்கு எண்ணெய் வயிறு கொழுப்பைக் குறைக்க உதவுமா?
(Ricinus communis) ரிச்சினஸ் கம்யூனிஸ் என்ற செடியில் இருந்து எடுக்கப்படும் இந்த ஆமணக்கு எண்ணெய் இந்தியாவை பூர்விகமாக கொண்டது.
இது ஒரு தனித்துவமான சுவை மற்றும் வாசனை மற்றும் monounsaturated கொழுப்பு அமிலம் நிறைந்து உள்ளது.
இதில் வைட்டமின் ஈ மற்றும் தாதுப்பொருள்கள் போன்ற தேவையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.
இது வியக்கத்தக்க அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இது பெரும்பாலும் உணவு பதப்படுத்தும் பொருளாக மிட்டாய்களில் மற்றும் உணவு பேக்கேஜிங் ஆகியவற்றில் பயன்படுத்தப் படுகிறது.
குழந்தையை எளிதாக தூங்க வைப்பது எப்படி? தெரியுமா?
இது முடி வளர்ச்சி தூண்டுகிறது மற்றும் ஒரு மலமிளக்கியாக செயல்பட கூடியது. ஆமணக்கு எண்ணெய் பல வகையான சுகாதார நன்மைகளை வழங்குகிறது.
இது கொழுப்பு உறிஞ்சுதலைத் தடுத்து, வீக்கம் ஆகியவற்றை குறைத்து, மற்றும் மலமிளக்கியாக செயல்படுவதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து அதன் மூலம் எடையை குறைக்க உதவுகிறது.
பல குறைகளையும், ரோகங்களையும் களையும் அற்புத சக்தி அதற்கு உண்டு என்று எத்தனை பேர் அறிவார்கள்?
காய்ச்சிய ஆமணக்கு எண்ணெய்யில் 3 முதல் 5 துளிகள் வரை இரவு படுக்கப்போகும் முன் குடித்து வர, மலச்சிக்கல் நீங்கும்.
சிறு குழந்தைகளுக்கு 2 துளிகள் போதுமானது. இது பக்கவிளைவற்ற பாதுகாப்பான மலமிளக்கி.
காய்ச்சிய எண்ணெய்யுடன் கால் பங்கு எடையில் கடுக்காய் பிஞ்சுப் பொடியைச் சேர்த்து நன்கு அரைத்து வாய்வு, மூலக்கடுப்பு,
ரத்தமூலம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கப் போகும் முன் 5 மில்லி வரை குடித்து வர, அனைத்து மூலப்பிரச்சினைகளும் தீரும்.
மாட்டு இறைச்சி உண்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?
முந்திய தலைமுறையில், மாதத்திற்கு ஒரு முறை விளக்கெண்ணெய் குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
பாட்டிமார்கள்/தாய்மார்கள், குழந்தைகளுக்கு காலை வேளையில், வெறும் வயிற்றில், விளக்கெண்ணையை பாலுடன் கலந்து கொடுப்பார்கள்.
அப்பொழுது ஒரு பெரிய போராட்டமே வீட்டில் நடக்கும். குழந்தைகளை விரட்டிப் பிடித்து, மடியில் கிடத்தி அமுக்கி, வாயில் விளக்கெண்ணையை புகட்டி விடுவார்கள்.
குடித்தவர்கள், சொம்பும் கையுமாக அலைந்து வயிறு சுத்தமான பின்தான், வீட்டார், அவர்களுக்கு பத்திய சாப்பாட்டினை கண்ணிலே காட்டுவார்கள்.
வயிற்றினுள் மஷ்டு இல்லாமல் இருந்ததால், வியாதியும் குறைவாக இருந்தது.
ஒவ்வொரு நாள் காலையிலும், ஒரு தம்பளர் ஆரஞ்சு ஜூஸ் உடன் ஒரு ஸ்பூன் எண்ணையைக் கலந்து குடித்து வர மலச்சிக்கலே இருக்காது. மலச்சிக்கலினால் உண்டாகும் ரோகமும் அண்டாது.
பச்சைக்குத்திக் கொள்வதால் என்னென்ன தீமைகள் உண்டாகிறது?
சுத்தமான மிதமான சூட்டில் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும்.
இந்த ஆமணக்கு எண்ணெய் அதாவது விளக்கெண்ணெய், நம் வயிற்றை அதிக அளவுக்கு சுத்தம் செய்யும்.
அந்த காலத்தில் நம் முன்னோர்கள் வயிற்றை சுத்தப்படுத்த இந்த ஆமணக்கு எண்ணெயைத் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இது உடனடியாக மலச்சிக்கலைத் தீர்த்து நம் வயிற்றில் இருக்கும் கிருமிகளை வெளித்தள்ளி விடும். மேலும் இந்த கிருமிகளை வராமலும் தடுக்கும்.
இந்த கலவையோடு அரை ஸ்பூனுக்கு உப்பும் சேர்த்துக்கலாம். பாதி எழுமிச்சையையும் இதனோடு சேர்க்க வேண்டும். இதனால் சளித்தொல்லையும் வராது.
இதை வாரம் ஒரு முறை எடுத்துக்கலாம். இதை வெறும் வயிற்றில் தான் குடிக்க வேண்டும். அப்படி குடிப்பதற்கு முன்பு சாதாரண பச்சைத் தண்ணீர் அரை கிளாஸ் குடித்துக் கொள்ள வேண்டும்.
அக்வா ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம் !
அதன் பின்னர் இதைக் குடிக்க வேண்டும். மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரை குடித்தாலே நம் வயிறு க்ளீன் ஆக ஆரம்பிக்கும்.
இந்த தண்ணீரைக் குடித்த 15 நிமிடத்திலேயே நம் வயிறு சுத்தமாகிடும். இதை 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கால் கிளாஸ் அளவுக்கு கொடுக்கலாம்.