நினைவுத்திறனை அதிகரிப்பதால் வல்லாரைக்கு யோசனவல்லி என்று பெயர் உண்டு. இதனை பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் கணைச்சூடு, மாந்தம் ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கும்.
வல்லாரை கீரை நரம்புகளை வலுவாக்கி ஞாபக சக்தியைப் பெருக்கும். இதனை பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் கணைச்சூடு, மாந்தம் ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கும்.
Brahmoside, Brahminoside போன்ற வேதிப்பொருள்கள் வல்லாரையில் இருப்பதால், மனதைச் சாந்தப்படுத்தும் குணம் அதற்கு உண்டு.
சரி, இனி வல்லாரையை பயன்படுத்தி வல்லாரை சட்னி செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம்.
வியக்க வைக்கும் நன்மைகள் கொண்ட விளக்கெண்ணெய் பற்றி தெரியுமா? உங்களுக்கு !
தேவையானவை:
வல்லாரைக்கீரை - அரை கட்டு,
தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,
சுத்தம் செய்த இஞ்சி - சிறிய துண்டு,
தேங்காய் துருவல் - கால் கப்,
பச்சை மிளகாய் - 5,
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும். சுவையான வல்லாரை சட்னி தயார்!
பிகா என்னும் பார்க்கும் பொருளை சாப்பிடும் பழக்கம் !
குறிப்பு:
வல்லாரைக் கீரை சமைக்கும் போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.