வெஜ் மசாலா சாண்ட்விச் ரெசிபி செய்வது எப்படி?

வெஜ் மசாலா சாண்ட்விச் ரெசிபி செய்வது எப்படி?

0

சாண்ட்விச் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறுகிய நேரத்திலேயே ஒரு சத்தான உணவை செய்ய வேண்டும் என்றால் பலரின் சாய்ஸ் சாண்ட்விச்சாகத் தான் இருக்கிறது. 

வெஜ் மசாலா சாண்ட்விச் ரெசிபி செய்வது எப்படி?
சாண்ட்விச்சில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் சாண்ட்விச், மட்டன் சாண்ட்விச், வெஜிடபிள் சாண்ட்விச், பன்னீர் சாண்ட்விச், மற்றும் மஷ்ரூம் சாண்ட்விச் பிரபலமானவை. 

இன்று இங்கு நாம் காண இருப்பது ஒரு வித்தியாசமான பிரெட் சாண்ட்விச்.

இந்த பிரெட் சாண்ட்விச்சின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெறும் வெங்காயம், தக்காளி, மற்றும் கேரட்டை கொண்டே வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம். 

ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை 50 க்கு பிறகும் சிறப்பாக இருக்க வேண்டுமா?

மேலும் சமைக்க தெரியாதவர்கள் கூட இந்த பிரெட் சாண்ட்விச்சை வெகு சுலபமாக முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம். 

அது மட்டுமின்றி நம் குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கோ அல்லது அலுவலகங்களுக்கோ கொண்டு செல்ல இவை ஒரு அருமையான லஞ்ச்பாக்ஸ் ரெசிபியும் கூட.

பிரெட் சாண்ட்விச்சை ஒரு அருமையான மாலை நேர சிற்றுண்டி ஆகவும் நாம் உண்ணலாம். ஸ்கூலில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இதை நாம் சுட சுட செய்து கொடுக்கலாம். 

பொதுவாக கேரட்டை பொரியலாக செய்து கொடுத்தால் அதை உண்ண குழந்தைகள் அடம் பிடிப்பார்கள். 

ஆனால் அதை இவ்வாறு சாண்ட்விச்சாக செய்து கொடுத்தால் அதை அவர்கள் விரும்பி உண்பார்கள். இன்னும் வேண்டும் என்று கேட்டு உண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

உறவின் போது ஆண்களுக்கு வெறுப்பை தரும் பெண்களின் இந்த செயல்கள் !

தெரியாதவர்கள் கூட இந்த பிரெட் சாண்ட்விச்சை வெகு சுலபமாக முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம்.

தேவையான பொருட்கள் :.

ப்ரெட் - 4 

பெரிய வெங்காயம் - 1 

தக்காளி - 1 

கேரட் - 3 

பச்சை மிளகாய் - 1 

பொடியாக நறுக்கிய பூண்டு - ½ மேஜைக்கரண்டி 

பொடியாக நறுக்கிய இஞ்சி - ½ மேஜைக்கரண்டி 

கரம் மசாலா - ¼ மேஜைக்கரண்டி 

மிளகாய் தூள் - தேவையான அளவு 

வெண்ணெய் - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு 

செயற்கைச் சிறுநீரகம்... தெரியுமா? உங்களுக்கு !

செய்முறை :.

வெஜ் மசாலா சாண்ட்விச் ரெசிபி செய்வது எப்படி?

முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை தயார் செய்து வைத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

மூல நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள உடற்பயிற்சி அவசியமா?

எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு, மற்றும் பச்சை மிளகாயை போட்டு அதை இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு நன்கு கிளறி விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு அதில் நாம் துருவி வைத்திருக்கும் கேரட்டை போட்டு நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி?

2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விடவும்.

அந்த கலவை சிறிது நேரம் ஆறிய பின் அதை கொஞ்சமாக எடுத்து 2 பிரட்களுக்கு நடுவில் வைத்து அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

இவ்வாறு மீதமுள்ள கலவைகளையும் பிரட்களுக்கு நடுவில் வைத்து தயார் செய்து தட்டில் வைத்து கொள்ளவும்.

பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய்யை ஊற்றி அதை உருக விடவும்.

வெண்ணெய் உருகியதும் அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சாண்ட்விச்சை வைத்து அதை ஒரு கரண்டியின் மூலம் லேசாக அழுத்தி விட்டு பின்பு அதன் மேலேயும் சிறிதளவு வெண்ணெய்யை தடவி விடவும்.

பின்னர் ஒரு புறம் அது பொன்னிறமானதும் அதை மறு புறம் பக்குவமாக திருப்பி போட்டு இரு புறமும் அது பொன்னிறமானதும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட கெட்சப்வுடன் பரிமாறவும்.

சத்து நிறைந்த வெள்ளை பூசணிக்காய் சாம்பார் செய்வது எப்படி?

இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பிரட் சாண்ட்விச் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)