கடைகளில் ஜூஸ் குடிக்கலாமா? ஆரோக்கியத்திற்கு நல்லதா?





கடைகளில் ஜூஸ் குடிக்கலாமா? ஆரோக்கியத்திற்கு நல்லதா?

0

மிக முக்கியமான விஷயம் என்ன வென்றால் கடைகளில் பழச்சாறுகள் குடிப்பது தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும். அவர்கள் ஜார்களை சரியாக கழுவாமல் அப்படியே நாள் முழுவதும் உபயோகிப்பார்கள்.

கடைகளில் ஜூஸ் குடிக்கலாமா? ஆரோக்கியத்திற்கு நல்லதா?

பழங்களால் எளிதில் பேக்டீரியா போன்ற நுண் கிருமிகள் உற்பத்தியாகி விடும். ஆரோக்கிய மானது என நினைத்தால் அவை வயிற்றுப் பிரச்சனை களை உருவாக்கும். முடிந்த வரை வீட்டிலேயே குடிப்பது நல்லது.

அப்படியே தவிர்க்க முடியா விட்டாலும் ஜார்களை நன்றாக கழுவி உபயோகிக்கிறார்களா என பார்க்கவும்.

கீமா மட்டன் உருண்டை கறி செய்வது எப்படி?

சர்க்கரை உபயோகிக்க கூடாது :

சர்க்கரை உபயோகித்து ஜூஸ் குடிப்பதையே பெரும்பாலோனோர் வழக்கத்தில் வைத்திருக்கிறோம். ஆனால் அது நல்லதல்ல. இது உடல் எடையை கணிசமாக கூட்டி விடும். 

ஏனென்றால் பழங்களிலேயே தேவையான அளவு சுக்ரோஸ் இருக்கிறது. இதில் கூடுதலாக நாம் சர்க்கரையை சேர்க்கும் போது 

அதன் முழு நன்மைகளும் கிடைக்காமல், கலோரியை அதிகரித்து விடுகிறோம். ஆகவே சர்க்கரையை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

ஸ்டோர் செய்யக் கூடாது :

அப்போது தயாரித்து அப்போதே குடித்துவிட வேண்டும். இதனால் முழு சத்துக்களும் கிடைக்கும். ஃபிர்ட்ஜில் வைப்பதால் சில நுண் சத்துக்கல் அழிந்து விடுகின்றன. ஆகவெ எந்த பழச் சாறையும் ஃப்ரஷாக குடித்து விடுங்கள்.

மில்க் ஷேக் குடிக்கலாமா?

கடைகளில் ஜூஸ் குடிக்கலாமா? ஆரோக்கியத்திற்கு நல்லதா?

எல்லா வித பழங்களிலும் பால் கலந்து மில்க் ஷேக் குடிக்கிறார்கள். இது தவறு. பாலில் எலுமிச்சை கலந்தால் என்னாகும்.திரிந்து விடும் தானே? அப்படிதான் சிலவகை பழங்கள். 

மிகவும் இனிப்பான பழுத்த பழங்களுடன் பால் கலந்து ஜூஸ் தயாரி க்கலாம். மாம்பழம், ஆப்பிள் போன்ற வற்றில் குடிக்கலாம். ஆனால் திராட்சை, ஆரஞ்சு, மாதுளை போன்ற வற்றில் குடிக்கக் கூடாது. 

கிட்னியை கவனியுங்கள் மருத்துவக் குறிப்புகள் !

ஸ்ட்ரா பெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் இனிப்பாக இருந்தாலும் அவற்றில் புளிப்பு சுவையும் உள்ளது. ஆகவே ஸ்ட்ரா பெர்ரி, அன்னாசி ஆகியவை பாலுடன் கலந்து குடிக்கக் கூடாது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)