பேரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !

பேரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !

0

ஆப்பிளைப் போன்றே அதிக சத்துக்களைக் கொண்ட பழம் தான் பேரிக்காய். பேரிக்காயை நம் நாட்டின் ஆப்பிள் என்று கூடச் சொல்வார்கள். பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. 

பேரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !

இப்பழத்தினை உணவிற்கு முன் சாப்பிட்டால் உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்குவதைத் தவிர்த்து உடல் எடையிலும் மாற்றத்தை  உண்டாக்குகிறது.

செலரியை எப்படித் தேர்வு செய்து சமைப்பது?

மேலும் இதனில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளது. திடீரென இதயம் சிலருக்கு படபடக்கும். மனதில் அச்சம் தோன்றும், வியர்வை ஏற்படும்

கை, கால் உதறும் இப்படிப்பட்டவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் இந்தப் பலவீனங்கள் நீங்கும்.

பேரிக்காயில் நார்ச்சத்துக்களோடு சேர்த்து கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளாவனாய்டுகள் எனப்படும் குறிப்பிடத்தக்க இரு வகையான உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்கள் (ஆண்டி ஆக்ஸிடண்ட்) உள்ளன. 

இவற்றின் மூலம் பேரிக்காய் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு வயிற்றில்  சேராமல் தடுக்கும் என்று சில ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.

சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரி செய்யவும் 

உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது. பேரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள், பற்கள் பலப்படும். இதயம் வலுவாகும். 

சுவையான செலரி தொக்கு செய்வது எப்படி?

இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல்  இதற்கு உண்டு. அன்றாடம் பேரிக்காய் சாப்பிடுவதால் அடிக்கடி உண்ணும் போது நல்ல பசியும், ஜீரணமும் ஆகும். 

வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல்  பேரிக்காய்க்கு உண்டு. பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மை தான் இதன் பலமே. பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும் போது அது இதய நோயை கட்டுப்படுத்துகிறது. 

இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. யூரிக் அமிலம் உடலில் அதிகமாக சுரந்து, அது உடலிலிருந்து வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டால் கணுக்காலில் வீக்கம் ஏற்படும். 

இந்த யூரிக் அமிலத்தை வெளியேற்றும் ஆற்றல் பேரிக்காய்க்கு உள்ளது. மருத்துவப் பயன்கள்: பேரிக்காயில் கால்சியம், பாஸ்பரஸ் கணிசமாக உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கும் நல்லது. 

பேரிக்காயை ஜூஸ் செய்து குடிப்பதை விட, துண்டுகளாக்கி மென்று தின்பதால், இதிலுள்ள சத்துப் பொருட்கள் சிதையாமல் முழுவதும் கிடைக்கும். 

பேரிக்காயை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். 

ரத்தத்தில் ஆக்சிஜன் அதிகம் கிடைக்கச் செய்யும். மலச்சிக்கலைப் போக்கும். சீதபேதியைக் கட்டுபடுத்தும் குணம் இதற்கு உண்டு. அஜீரணக் கோளாறுகளை அகற்றி, நன்கு பசியை உண்டாக்கும். 

இரவில் படுக்கும் முன் உதடுகளில் வெண்ணெயை தடவி வரவும் !

பெக்டின் உள்ளதால் குடல் புற்றுநோய் திசுக்கள் வளராது காக்கும் ஆற்றல் உள்ளது பேரிக்காய். பேரிக்காய் சாற்றுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வர உடல் வலுப்பெறும். 

பேரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !

சோர்வு, மன இறுக்கம் நீக்கி புத்துணர்வு தரும். பேரிக்காயில் நுண்ணூட்ட சத்துகளும், வைட்டமின்களும் தாராளமாக இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தைக் குறைத்து, குளிர்ச்சியை ஏற்படுத்தும். பற்களுக்கு உறுதியைத்தரும். ஈறுகளைப் பலப்படுத்தும். இதனால் பற்களில் ஏற்படும் சொத்தையையும் தடுக்கும். 

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளைக் குணப்படுத்தி, ஒழுங்குப்படுத்தும். நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் பேரிக்காயை அடிக்கடி உண்டு வர, நரம்புகள் பலம் பெறும். 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)