சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப் பயிறு சாலட் ரெசிபி செய்வது எப்படி?





சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப் பயிறு சாலட் ரெசிபி செய்வது எப்படி?

0

நமக்கு இருக்கக்கூடிய உடல் எடையும் குறைய வேண்டும். உடலில் இருக்கும் சத்துக்களும் குறையக் கூடாது. முடியும் கொட்டக் கூடாது. 

சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப் பயிறு சாலட் ரெசிபி செய்வது எப்படி?

சருமமும் பளபளப்பாக இருக்க வேண்டும். என்றால் என்ன தான் சாப்பிடுவது? கொஞ்சம் சத்து மிகுந்த பொருட்களை சாப்பிட்டால் உடல் எடை ஏறி விடுகின்றது. 

சத்து குறைவாக சாப்பிட்டால், முடி கொட்டுகிறது. தோல் சுருக்கம் ஏற்படுகிறது. கண்ணுக்கு கீழே கருவளையம் வந்து விடுகிறது. 

ஆரோக்கியத்தையும், உடல் எடையையும் சரிசம விகிதத்தில் எப்படித்தான் மேனேஜ் செய்வது என்று கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு சின்ன ரெசிபி. 

காலையில நீங்க வேலைக்கு போனாலும் சரி, அரக்கபரக்க உட்கார்ந்து இதை சமைக்க வேண்டிய அவசியமே கிடையாது. 

வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள் ! 

பச்சையா எல்லா பொருட்களையும் போட்டு சேலட் ரெடி பண்ணி, சீக்கிரமா சாப்பிட்டுட்டு கிளம்பி விடலாம். 

உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய பச்சைப் பயிறு சாலட் ரெசிபி தான் இன்று நாம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள போகிறோம். 

தேவையான பொருள்கள் :.

பெரிய வெங்காயம் - 2 ஸ்பூன், 

பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 2 ஸ்பூன், 

பொடியாக நறுக்கிய தக்காளி பழம் - 2 ஸ்பூன், 

கேரட் துருவல் - 2 ஸ்பூன், 

தேங்காய் துருவல் - 2 ஸ்பூன், 

இஞ்சி துருவல் - 1/2 ஸ்பூன், 

எலுமிச்சை பழச்சாறு - 1/2 ஸ்பூன், 

புதினா இலை, கொத்தமல்லி தழை - தேவையான அளவு

எப்போதும் காதுக்குள் இரைச்சல் ஏற்பட காரணம் என்ன?

செய்முறை :.

சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப் பயிறு சாலட் ரெசிபி செய்வது எப்படி?

100 கிராம் பச்சைப் பயிரை, முதல் நாளே, 5 மணி நேரம் நன்றாக தண்ணீரில் ஊற வைத்து விட்டு, அதன் பின்பு நன்றாக தண்ணீரை வடிகட்டி விட்டு வெள்ளை துணியில் முடிந்து வைத்து விட்டால் போதும். 

மறுநாள் காலை அந்த பச்சை பயிறு நன்றாக முளை விட்டிருக்கும். இதை தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

பயிரில் இருக்கும் முளைகள் எல்லாம், உடையும் படி கழுவக் கூடாது. பார்த்து பக்குவமாக கழுவிக் கொள்ள வேண்டும். 

இது அப்படியே இருக்கட்டும். வேக வைக்கக் கூடாது. பச்சையாகத் தான் சாப்பிட போகிறோம். பொடியாக நறுக்கி வைத்திருக்கும். 

மூட்டு வலி, முழங்கால் வலி நீங்க மருத்துவம் !

பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய குடைமிளகாய், பொடியாக நறுக்கிய தக்காளி பழம், கேரட் துருவல், தேங்காய் துருவல், இஞ்சி துருவல், 

எலுமிச்சை பழச்சாறு ஆகிய இந்த பொருட்களை எல்லாம் முளைகட்டிய பச்சைப் பயிறுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு விட வேண்டும். 

இறுதியாக தேவையான அளவு உப்பு தூவி, கொள்ளுங்கள். காரத்திற்கு கொஞ்சமாக மிளகுத்தூளை தூவி கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவும் நல்லது. 

சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப் பயிறு சாலட் ரெசிபி செய்வது எப்படி?

இறுதியாக மிக மிக பொடியாக நறுக்கிய புதினா இலைகளையும், கொத்தமல்லி தழைகளையும் இதன் மேலே தூவி சாப்பிட்டு விடுங்கள். 

இதை சாப்பிட அவ்வளவு கஷ்டமாக ஒன்றும் இருக்காது. நன்றாக மென்று சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் நீங்கள் மிக மிக ஆரோக்கியமாக உணர்வீர்கள். 

ஆட்டிஸம் பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம் !

உடல் எடையை குறைப்பதற்காக சாப்பாட்டை நீங்கள் குறைவாக எடுத்துக் கொண்டாலும், 

உங்களுடைய உடலுக்கு தேவையான சத்து, உற்சாகம் அனைத்துமே இந்த பச்சையாக முளைக்கட்டிய சேலட்டை சாப்பிடும் போது, உங்களுக்கு கிடைத்து விடும். 

உடல் எடையும் சீக்கிரம் குறையும். அதோடு மட்டுமல்லாமல் முடி கொட்டாது. வயதான தோற்றம் சீக்கிரம் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. 

வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சேலட்டை நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சுலபமான இந்த சாலட்டை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)