உடல் சூடு முதல் ஆண்மைக் கோளாறு வரை போக்கும் பாதாம் பிசின் !





உடல் சூடு முதல் ஆண்மைக் கோளாறு வரை போக்கும் பாதாம் பிசின் !

0

பாதாம் மரத்தில் இருந்து வடியும் பிசினில் இருந்து இந்த பாதாம் பிசின் தயாரிக்கப்படுகிறது. இந்த பாதாம் பிசினைப் பயன்படுத்தி ஆயுர்வேதத்தில் நிறைய விஷயங்களை செய்து வருகிறார்கள். 

உடல் சூடு முதல் ஆண்மைக் கோளாறு வரை போக்கும் பாதாம் பிசின் !
இந்த பாதாம் பிசினில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. பாதாம் மரத்தில் இருந்து வடியும் பிசினை உலர்த்தி இது தயாரிக்கப்படுகிறது. 

இது பார்ப்பதற்கு பழுப்பு மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும். இந்த பாதாம் பிசினில் புரோட்டீன் சத்து காணப்படுகிறது. 

அதனால் இது ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கவும், ஒல்லியாக இருப்பவர்களின் உடல் எடையை அதிகரிக்கவும் உதவுகிறது. அந்த பாதாம் பிசின் செய்யும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.

கொலஸ்ட்ராளை குறைக்கும் ஆலிவ் எண்ணெய் !

தாதுக்கள் :

உடலுக்கு எந்தளவு வைட்டமின் சத்துகள் முக்கியமோ அதே அளவு மினரல் எனப்படும் தாதுக்களும் மிகவும் அவசியமாகும். 

இந்த தாதுக்கள் உடலின் எலும்புகள், தோல் போன்றவற்றின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும். 

தாதுக்கள் அதிகமுள்ள பாதம் பிசினை அதிகம் சாப்பிட்டு வர உடலின் தாது தேவை பூர்த்தியாகும்.

க்ரீம் செய்தல்

உடல் சூடு முதல் ஆண்மைக் கோளாறு வரை போக்கும் பாதாம் பிசின் !
மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் இந்த பாதாம் பிசினை க்ரீம் ஆக்கி பயன்படுத்தி வருகின்றனர். பாதி திட மற்றும் திரவ வடிவில் இந்த பிசினை தயாரிக்கின்றனர். 

இதை பிறகு லட்டு, ஐஸ்க்ரீம்கள் போன்ற இனிப்புகள் மற்றும் குளிர் பானங்களில் சுவைக்காக பயன்படுத்துகின்றனர். 

இதன் பசை போன்ற ஒட்டுத்தன்மை காரணமாக ஐஸ் க்ரீம் மற்றும் ஜெல்லிகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இது குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச் சத்துக்களையும் வழங்குகிறது

பிரசவத்திற்கு பிறகு பழைய நிலைக்கு வர

உடல் சூடு முதல் ஆண்மைக் கோளாறு வரை போக்கும் பாதாம் பிசின் !

பிரசவத்திற்கு பிறகு பாதாம் பிசின் சேர்க்கப்பட்ட லட்டை பெண்களுக்கு கொடுக்கும் சடங்கு உள்ளது. ஆயுர்வேத முறைப்படி இந்த முறை செய்யப்படுகிறது. 

இந்த பாதாம் பிசின் பெண்களின் உடலில் ஊட்டச் சத்துக்களை பிரசவத்திற்கு பிறகு திரும்பப் பெற உதவுகிறது. அதே மாதிரி மாதவிடாய் சுழற்சி பழைய நிலைக்கு வரவும் உதவுகிறது. 

எனவே லட்டு போன்ற இனிப்புகளில் இந்த பாதாம் பிசினை சேர்த்து பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்லது.

உடல்சூடு, செரிமாணம் நீக்கும் முருங்கை கீரை, அருகம்புல் !

உடல் எடை கூட, குறைக்க :

உடல் சூடு முதல் ஆண்மைக் கோளாறு வரை போக்கும் பாதாம் பிசின் !

பாதாம் பிசினுக்கு அதிகளவு இருக்கும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும், குறைவான எடை கொண்டவர்கள் எடை கூடவும் செய்யும் ஒரு சிறப்பு ஆற்றல் இருக்கிறது. 

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் பாதாம் பிசினை கலந்து ஒரு நாளைக்கு ஒரு முறை அருந்த வேண்டும். 

உடல் எடை கூட விரும்புவார்கள் கொழுப்பு நிறைந்த பாலில் பாதாம் பிசினை கலந்து சாப்பிட வேண்டும்..

உடல் சூடு :

உடல் சூடு முதல் ஆண்மைக் கோளாறு வரை போக்கும் பாதாம் பிசின் !

பாதாம் பிசின் ஒரு இயற்கையான குளுரூட்டியாக செயல்படுகிறது. இது உடல் வெப்பத்தை குறைக்க பயன்படுகிறது . சிலருக்கு எல்லாக் காலங்களிலும் உடம்பானது சூடாக இருக்கும். 

உடம்பு சூட்டின் காரணமாக அவர்கள் வயிற்று வலி, நீர் கடுப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடலாம். எனவே அதிகப்படியான உடம்பு சூட்டை தணித்து குளிர்ச்சியை கொடுக்க பாதாம் பிசின் உதவுகிறது. 

வயிற்றில் ஏற்படும் அசிடிட்டி போன்ற பிரச்சினைகளை போக்க உதவுகிறது. பாதாம் பிசின் எல்லா உடல் நிலைக்கும் ஏற்ற ஒன்று தான்.

எம்.ஆர்.ஐ ஸ்கேன் யார் யாரை பாதிக்கும்?

புண்கள் :

உடல் சூடு முதல் ஆண்மைக் கோளாறு வரை போக்கும் பாதாம் பிசின் !

வெட்டு காயங்கள், மற்றும் தீயினால் ஏற்பட்ட காயங்கள் ஆறுவதற்கு சற்று நாளாகும். இக்காயங்களை குணப்படுத்த நவீன மருந்துகளை பயன்படுத்தினாலும் அவ்வப்போது தண்ணீரில் ஊற வைத்த பாதாம் 

பிசினை சிறிது உள்ளங்கையில் எடுத்து, நன்றாக குழைத்து புண்கள், காயங்களின் மீது தடவி வந்தால் அவை சீக்கிரத்தில் ஆறும்.

சிறுநீரக பிரச்சனைகள் :

உடல் சூடு முதல் ஆண்மைக் கோளாறு வரை போக்கும் பாதாம் பிசின் !

கோடை காலங்களில் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு சிலருக்கு நீர் சுருக்கு ஏற்படுகிறது. மேலும் சிறுநீரக பைகளில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் சரியாக கழிக்க முடியாத நிலையும் உண்டாகிறது. 

ஊற வைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும். கோடை காலங்களில் ஏற்படும் நீர்வறட்சி மற்றும் நீர் சுருக்கு போன்றவை நீங்கும்.

மைக்ரோவேவ் அடுப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? 

அசிடிட்டி :

உடல் சூடு முதல் ஆண்மைக் கோளாறு வரை போக்கும் பாதாம் பிசின் !

சிலருக்கு அளவிற்கு அதிகமான உணவை சாப்பிடுவதாலும், இரவில் நெடு நேரம் கழித்து உணவு சாப்பிடுவதாலும் நெஞ்செரிச்சல், 

அசிடிட்டி எனப்படும் வயிற்றில் செரிமான அமிலங்களில் ஏற்றத்தாழ்வால் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருப்பது போன்றவை ஏற்படுகிறது. 

இப்படியான சமயங்களில் பாதாம் பிசினை ஊற வைத்து, சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்றவை நீங்கும்.

ஆண்மை குறைபாடுகள் :

உடல் சூடு முதல் ஆண்மைக் கோளாறு வரை போக்கும் பாதாம் பிசின் !

வெப்பம் அதிகம் நிறைந்த இடங்களில் பணி புரிவதாலும், இறுக்கமான கால் சட்டைகள் (பாண்ட்) அணிவதாலும் உஷ்ணம் அதிகமாகி இன்று ஆண்கள் பலருக்கும் அவர்களின் விந்து நீர்த்து போய் விடுகிறது. 

தினமும் இரவு இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து பருகி வந்தால் உடலின் உஷ்ணம் தணிந்து, நரம்புகள் வலுப்பெற்று விந்து கெட்டிப்படும். மலட்டுத்தன்மை இருந்தாலும் அது நீங்கும்.

தனியாவை பயன்படுத்தி பிரியாணி செய்வது எப்படி?

வெள்ளைப்படுதல் குணமாக: 

உடல் சூடு முதல் ஆண்மைக் கோளாறு வரை போக்கும் பாதாம் பிசின் !

உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாக மூன்று நாட்கள் தினமும் காலை, மாலை, இரவு என 

மூன்று வேலையும் ஊற வைத்த பாதாம் பிசினை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து அப்படியே சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்.

உடல் நலம் :

உடல் சூடு முதல் ஆண்மைக் கோளாறு வரை போக்கும் பாதாம் பிசின் !

நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலம் தேறி வரும் நபர்கள் பாதாம் பிசினை நீரில் ஊற வைத்து வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் நோயால் உடல் இழந்த பலத்தை மீண்டும் உடலுக்கு தரும். 

விநாயகர் சதுர்த்திக்கு அம்மினி கொழுக்கட்டை செய்வது எப்படி?

நீண்ட கால நோயை போக்குவதற்குண்டான நோயெதிர்ப்பு சக்தியையும் பெருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)