அருமையான கறுப்பு உளுந்து வடை செய்வது எப்படி?

அருமையான கறுப்பு உளுந்து வடை செய்வது எப்படி?

0

ஒவ்வொரு கோயில்களில் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் வழங்கப் படுகிறது. திருவாரூர் தியாகராஜ பெருமாளுக்கு நெய் முறுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. 

அருமையான கறுப்பு உளுந்து வடை செய்வது எப்படி?
திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமாக பிரசாதம் வழங்கப்பட்டாலும் குலசேகரன் படியை தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது என்னவோ தயிர்சாதம் மட்டும் தான். 

சுக்கிரனுக்குரிய ஸ்தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதமாக படைக்கப்படுகிறது.

கேரளா மாநிலத்திலுள்ள மகாதேவர் கோயிலில் மூலிகைகளை சாறு பிழிந்து அதனை பாலுடன் கலந்து ஈசனுக்கு படைக்கப்பட்டு அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு இட்லி நைவேத்தியமாக படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆந்திராவில் உள்ள சத்ய நாராயணருக்கு கோதுமை ரவை அல்வா பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

சித்தூர் மாவட்டத்திலுள்ள திருச்சானூர் அலர்மேல் மங்கை தாயார் கோயிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மிளகோதரை பிரசாதம் கொடுக்கப் படுகிறது. பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயிலில் மோதகம் பிரசாதம் தரப்படுகிறது. 

சிக்கன் ரைஸ், 27 புரோட்டா, பலூடா சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு... எங்க தெரியுமா?

இப்படி ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமான பிரசாதம் கொடுக்கப் படுகிறது. அந்த வகையில், இந்தப் பதிவில் பைரவருக்கு பிடித்தமான கறுப்பு உளுந்து வடை எப்படி செய்வது என்பது குறித்து பார்ப்போம்..

தேவையான பொருட்கள் :.

கறுப்பு உளுந்து - 1 கப்

வெண்ணெய், மிளகு - 2 ஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

கறிவேப்பிலை - 2 ஆர்க்கு

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :.

அருமையான கறுப்பு உளுந்து வடை செய்வது எப்படி?

கறுப்பு உளுந்தை வெறும் கடாயில் வாசனை வரும் வரையில் வறுக்க வேண்டும். அதன் பிறகு மிக்ஸியில் ரவை போன்று கரகரப்பாக பொடியாக்க வேண்டும். 

அதோடு கறிவேப்பிலை, துருவின இஞ்சி, மிளகுப் பொடி, வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். 

சென்னையில் கொசு மருந்தை குடித்து பலியான குழந்தை !

இதையடுத்து 15 நிமிடங்கள் ஊற வைத்து வடையாக தட்டி, கடாயில் சூடான எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டும்.

பைரவருக்கு செய்யப்படும் விசேஷமான நைவேத்தியம் தான் இந்த கறுப்பு உளுந்து வடை. இதனை உங்களது வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)