ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன?





ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

0

ஆரோக்கியமான தானியங்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பது ஓட்ஸ். மனிதர்களுக்குத் தேவையான முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள் நிறைந்த ஓட்ஸ், தானியங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது.

ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன?
ஓட்ஸ் மற்றும் ஓட்மீல் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ஓட்ஸை தொடர்ந்து சாப்பிட்டால், உடல் பருமன் குறையும் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் மற்றும் இதய நோய்கள் குறையும்.  ஓட்ஸில் கொழுப்பு மற்றும் உப்பு குறைந்த அளவிலே உள்ளது. 

இயற்கையாகவே இதில் இரும்புசத்தும், சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளதால், இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு நல்லது. 

ஆரோக்கியமான தைராய்டு சுரப்பிக்கு சர்வங்காசனம் பயிற்சி !

இதிலுள்ள கரையக்கூடிய நார்பொருள் (பீடா குளுகான்) ரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. 

அதிக கரையக்கூடிய நார்பொருள், வயிறு/குடல் செயல்களை ஒழுங்கு செய்து மலச்சிக்கலை தீர்க்கிறது.

உணவில் அதிக அளவு ஓட்ஸை சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நிலையாக இருக்கும், நரம்பு சம்மந்தமான கோளாறுகள் ஏற்படாது.

ஓட்ஸில் உள்ள சில தனிப்பட்ட கொழுப்பு அமிலம் மற்றும் ஆட்டி ஆக்ஸிடாண்ட்ஸ்கள், வைட்டமின் ஈ-உடன் இணைந்து, உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது.

அதோடு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது. ஓட்ஸின் அடிப்படை வடிவமான ஓட்ஸ் க்ரோட்ஸ் சமைக்க நீண்ட நேரம் எடுக்கும். 

ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

எனவே தான் பொதுவாக உருமாற்றம் செய்யப்பட்ட ஓட்ஸே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட ஓட்ஸை உடனே சமைக்கலாம். 

பொதுவாக காலை உணவுக்கு ஓட்ஸ் எனவே பலரும் நினைக்கிறார்கள். பாலில் வேக வைத்து கஞ்சியாக பயன்படுத்துவது, சிறந்த காலை உணவாக கருதப்படுகிறது. 

ட்ரைகிளிசரைட் (Triglycerides) என்றால் என்ன?

மஃபின்கள், கிரானோலா பார்கள், குக்கீகள் மற்றும் பிற வேக வைத்த பொருட்களிலும் ஓட்ஸ் சேர்க்கப்படுகிறது. 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)