சுவையான காலிப்ளவர் ஸ்டப்டு பூரி செய்வது எப்படி?





சுவையான காலிப்ளவர் ஸ்டப்டு பூரி செய்வது எப்படி?

0

காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. 

சுவையான காலிப்ளவர் ஸ்டப்டு பூரி செய்வது எப்படி?

இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது. 

உடலில் மூட்டுக்களில் வலி, வீக்கம் போன்ற பிரச்சினை ஏற்பட்டவர்கள் காலிபிளவரை தொடர்ந்து சாப்பிட்டு வர, 

அதிலிருக்கும் பியூரின் வேதிப்பொருள் அவர்களின் மூட்டுவலி, வீக்கம் போன்றவற்றை குணமாக்குகிறது. 

காலிபிளவரில் சல்பர் கூட்டுப் பொருட்கள் மற்றும் குளுக்கோஸிநோலேட்டுகள் ஆகிய வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. 

இந்த அடையாளம் உள்ள பெண்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுவார்களாம் !

இவை நிறைந்திருக்கும் காலிபிளவரை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இருக்கும் நச்சுத் தன்மைகள் நீங்கி உடல் தூய்மை பெறும்.

தேவையான பொருட்கள் :.

காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று,

கோதுமை மாவு - 200 கிராம்,

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வாகன இன்சூரன்ஸினை புதுபிக்கவில்லை எனில் ஒரு ஹேப்பி நியூஸ் !

செய்முறை :.

சுவையான காலிப்ளவர் ஸ்டப்டு பூரி செய்வது எப்படி?

காலிஃப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கவும். சூடான நீரில் காலிஃப்ளவரை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். 

பிறகு, தண்ணீரை வடிய விட்டு காலிஃப்ளவர் பூக்களைத் தனியே எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு பூரி மாவு போல பிசையவும். 

காலிஃப்ளவருடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மசிக்கவும்.

மரணத்தின் புத்தகம் மூலம் பெண்களை வசியம் செய்த எகிப்தியர்கள் தெரியுமா?

கோதுமை மாவை சிறிய உருண்டைகளாக்கி பூரிகளாக திரட்டி நடுவே காலிஃப்ளவர் கலவையை வைத்து மடித்து மீண்டும் திரட்டவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து திரட்டிய பூரிகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

சூப்பரான காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பூரி ரெடி. குறிப்பு: இது சாதாரண பூரி போல உப்பி வராது. தட்டையாகவே இருந்தாலும், ருசி நன்றாக இருக்கும். 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)