பன்னீர் நம்முடைய உடலுக்கு தரும் நன்மைகள் என்ன?





பன்னீர் நம்முடைய உடலுக்கு தரும் நன்மைகள் என்ன?

0

இந்திய சீஸ் வகைகளில் ஒன்றான இந்த பன்னீர் சைவ பிரியர்களுக்கு விருப்பமான ஒன்று. இது உடலுக்கு ஆற்றலை அளிக்க கூடியது. பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. 

பன்னீர் நம்முடைய உடலுக்கு தரும் நன்மைகள் என்ன?
எனவே நீங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது உங்களுக்கு ஆரோக்கியத்தை தரும். மேலும் இதில் செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. 

இது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உங்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பை கட்டுப்படுத்த இதிலுள்ள பொட்டாசியம் உதவுகிறது. 

செலினியம் கருவுறாமை பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. இதில் கால்சியம் அதிகளவு காணப்படுவதால் இது பற்கள் மட்டும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

இன்னும் பன்னீரால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை அறிந்து கொள்வோம்.

லெமன் ஃபிஷ் ஃப்ரை செய்முறை !

​பக்கவாதத்தை தடுக்கிறது

பன்னீர் நம்முடைய உடலுக்கு தரும் நன்மைகள் என்ன?

பன்னீரில் உள்ள பொட்டாசியம் உள்ளடக்கம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. 

மூளைக்கு அதிக இரத்த ஓட்டம் இருக்கும் போது பக்கவாதம் ஏற்படுகிறது. இது தசைப்பிடிப்பைத் தடுக்கும் திரவங்களையும் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. 

எப்போதும் அதிக திரவ உட்கொள்ளல் தேவைப்படும் விளையாட்டு வீரர்களுக்கு இது பயனளிக்கிறது என் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

அதோடு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

பள்ளியிலேயே தகாத உறவு.. ஆசிரியருக்கு தர்ம அடி !

வலுவான பற்கள் மற்றும் எலும்பு

பன்னீர் நம்முடைய உடலுக்கு தரும் நன்மைகள் என்ன?

பன்னீர் பல், எலும்புகள் மற்றும் தசைகளை உருவாக்க உதவுகிறது. பன்னீர் பற்சொத்தையை தடுக்கிறது. 

பன்னீரில் உள்ள லாக்டோஸின் அளவு உண்மையில் குறைவாக இருப்பதால் இது பல் சொத்தையை தடுக்கிறது.

​உடல் மெட்டாபாலிசத்தை மேம்படுத்துகிறது

பன்னீர் நம்முடைய உடலுக்கு தரும் நன்மைகள் என்ன?

பன்னீர் சாப்பிடும் போது உடனடி ஆற்றலை பெறுவீர்கள். இது உடல் மெட்டா பாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் கொழுப்பு தங்க அனுமதிக்காது. 

பன்னீர் என்பது லினோலிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும், இது உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.

இறால் வறுவல் செய்முறை !

​சரும ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது

பன்னீர் நம்முடைய உடலுக்கு தரும் நன்மைகள் என்ன?

இதில் செலினியம் இருப்பது நமக்கு பளபளப்பான சருமத்தை தருகிறது. எனவே அன்றாட உணவில் பன்னீர் சேர்ப்பது உங்க சரும ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. 

எனவே பன்னீரை உணவில் சேர்த்து பலவிதமான நன்மைகளை பெறுங்கள்.

​உடல் மற்றும் மூட்டு வலியை குறைக்கிறது

பன்னீர் நம்முடைய உடலுக்கு தரும் நன்மைகள் என்ன?

பன்னீரில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை கீல்வாதத்தை எதிர்த்து போராட உதவுகிறது. 

எனவே மூட்டுவலியால் பாதிக்கப்படுபவர்கள் பன்னீரை சேர்த்துக் கொள்ளுங்கள். இதிலுள்ள ஒமேகா 3 கர்ப்பிணி பெண்களுக்கு நன்மை அளிக்கும். 

இது பிரசவ கோளாறுகளின் வாய்ப்புகளை குறைக்கிறது. எனவே சைவ உணவு உண்பவர்கள் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 அமினோ அமிலங்கள் கிடைக்க உதவுகின்றன.

மீன் புளி வறுவல் செய்முறை !

முடிவு

பன்னீர் நம்முடைய உடலுக்கு தரும் நன்மைகள் என்ன?

காலை நேரங்களில் பனீர் சாப்பிடுவது நல்லது.   இரவு நேரங்களில் பனீர் சாப்பிடுவதால் நல்ல தூக்கம் வரும், ஆனால் ஜீரணக்கோளாரு இருப்போர் இரவில் பனீர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். 

ஏனெனில் பனீரில் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சணையை எற்படுத்தும்.

பனீரை கடைகளில் வாங்கி சாப்பிடுவது தவறு, ஏனெனில் அதில் ரசாயனம் கலக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளன. எனவே வீட்டில் செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. 

அதுமட்டுமின்றி செலவு குறைவு. பனீரில் அதிக சத்துக்கள் இருந்தாலும் நாம் அதனை அதிகமாக சாப்பிடக் கூடாது. 

ஏனெனில் இதில் கொழுப்புச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

கண்களின் கீழ் வரும் வீக்கத்தை தடுக்க எளிய வழிமுறைகள் !

ஜீரணக்கோளாரு, சர்க்கரை வியாதி மற்றும் இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் பனீரை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)