சுவையான செட்டிநாடு முருங்கைக்காய் மட்டன் மசாலா செய்வது எப்படி?





சுவையான செட்டிநாடு முருங்கைக்காய் மட்டன் மசாலா செய்வது எப்படி?

0

முருங்கைக்காயில் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, 

சுவையான செட்டிநாடு முருங்கைக்காய் மட்டன் மசாலா செய்வது எப்படி?
விறைப்புத்தன்மை குறைபாடு, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை போன்ற அத்தனை பிரச்சனைகளும் தீருகின்றன. 

முருங்கைக்காயில் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது. 

ட்ரைகிளிசரைட் குறைய எந்த வகையான உணவு நல்லது? #triglycerides

இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் உறுதியடைவதோடு எலும்புகள் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது. 

கர்ப்பிணிகள் முருங்கைக்காயை அதிகம் உணவில் சேர்த்து உண்பதால்  குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. 

சரி இனி முருங்கைக்காய் கொண்டு சுவையான செட்டிநாடு முருங்கைக்காய் மட்டன் மசாலா செய்வது எப்படி? என்று பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

முருங்கைக்காய் - 2

பெரிய வெங்காயம் - 100 கிராம்

கிராம்பு - 2

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

பட்டை - 1 துண்டு

தேங்காய்த் துருவல் - ½  கப்

சோம்பு - அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

கசகசா - ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 10

முழு மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

மிளகு - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

ட்ரைகிளிசரைட் (Triglycerides) என்றால் என்ன?

செய்முறை

சுவையான செட்டிநாடு முருங்கைக்காய் மட்டன் மசாலா செய்வது எப்படி?

முதலில் மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து, துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 

தேங்காயை துருவி சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். 

இறந்தவர் உடலை பாதுகாக்க என்ன செய்வது?

காய்ந்த மிளகாய், முழுமல்லி (தனியா), சீரகம், கசகசா, மிளகு, சோம்பு,பட்டை,கிராம்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து மட்டன் துண்டுகளைச் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து மட்டனை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மசாலா பச்சை வாசனை போனதும்  வேக வைத்த மட்டன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள முருங்கைக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.  

முருங்கை காய் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். 

ஸ்மைலிங் டிப்ரஷன் என்றால் என்ன?

மட்டனுடன் மசாலா கலவை நன்கு சேர்ந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி இறக்கி சூடாகப் பரிமாறினால் சுவையான முருங்கைக்காய் மட்டன் மசாலா ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)