சுவையான கிரில்டு இறால் செய்வது எப்படி?





சுவையான கிரில்டு இறால் செய்வது எப்படி?

0

சிக்கன், மட்டன் போல கடல் உணவுகளையும் விரும்பி உண்ணுபவர்கள் பலர் உள்ளனர். சொல்லப்போனால் மற்ற அசைவ உணவுகளை விட, கடல் உணவில் தான் பல உடல் நல ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளது. 

சுவையான கிரில்டு இறால் செய்வது எப்படி?
முக்கியமாக அவை இதயத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் அது மீனோடு மட்டும் நின்று விடுவதில்லை. 

மீனை போல் இன்னும் பல கடல் உணவுகளினாலும் நமக்கு பல உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது. அப்படி ஒரு வகை உணவு தான் இறால். 

இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. சரி இனி இறால் கொண்டு சுவையான கிரில்டு இறால் செய்வது எப்படி? என்று பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

இறால் - 500 கிராம்

பூண்டு - 4-5 பெரியது

எலுமிச்சை சாறு - 3 மேசைக்கரண்டி

ஆலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

அரைத்த மிளகு - 1 தேக்கரண்டி

நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி

உப்பு - சுவைக்கேற்ப

செட்டிநாடு வாழைக்காய் கோலா உருண்டை செய்வது எப்படி?

செய்முறை

சுவையான கிரில்டு இறால் செய்வது எப்படி?

கொத்தமல்லி இலையை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இறால், நசுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், 

அரைத்த மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

கிரில்லை சூடாக்கி அனைத்து இறால்களையும்  ஒரே லேயராக பெரிய ஆவன்-ப்ரூப் பாத்திரத்தில் வைக்கவும்.

பேப்பர் ரோஸ்ட் செய்வது எப்படி?

பாத்திரத்தை கிரில்ன் கீழ் வைக்கவும். இறாலின் ஒரு புறத்தை 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.

பாத்திரத்தை வெளியே எடுத்து, இறால்களைத் திருப்பவும். மறு புறமும் 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும். பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான க்ரில்டு இறால் ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)