வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துகள், பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது. 
ஆரோக்கியம் நிறைந்த வெண்டைக்காய் தோசை செய்வது எப்படி?
இதே போல் இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்துகள் குறைகின்றன. 

ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி? 

குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. 

வெண்டைக்காயில் பீட்டா கரோட்டின் இருப்பதால், கேட்ராக்ட் மற்றும் குளூக்கோமா பிரச்னைகளைத் தவிர்ப்பதோடு பார்வைத் திறன் மேம்பட உதவுகிறது. 

சுவையான வெண்டைக்காய் தோசை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

ஒரு ட்வீட் செய்ய 19 கோடியா? அதிர்ச்சி தகவல் !

தேவையானவை: 

பச்சரிசி - 2 கப், 

உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், 

வெண்டைக்காய் காம்புப் பகுதி (சுத்தம் செய்தது) - அரை கப், 

பெருங்காயத்தூள் - சிறிதளவு, 

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: 
ஆரோக்கியம் நிறைந்த வெண்டைக்காய் தோசை செய்வது எப்படி?
அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும். வெண்டைக்காய் காம்பை பொடியாக நறுக்கி, அரிசியுடன் சேர்த்து உப்பு போட்டு நைஸாக அரைக்கவும். 
இந்த மாவு 5 மணி நேரம் புளிக்க வேண்டும். மாவை கரண்டியில் எடுத்தால் ஜவ்வு போன்று கொழ கொழப்பாக இருக்கும். 

ஆனால் தோசைக்கல்லில் மாவை ஊற்றி கரண்டியால் தேய்த்தால், அழகான தோசை வார்க்க வரும். வேண்டாம் என்று தூக்கி எறியும் காம்பில் செய்யும் வித்தியாசமான தோசை இது.