ஊறுகாய்யை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் !

ஊறுகாய்யை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் !

0

ஊறுகாய்களில் அதிக அளவு உப்பு இருப்பதால் சோடியம் நிறைந்துள்ளது. மேலும், அவற்றில் ஏராளமான எண்ணெய் உள்ளது. 

ஊறுகாய்யை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் !
உப்பு மற்றும் எண்ணெய் ஊறுகாயில் சேர்க்கப்பட்ட பொருட்களை பாதுகாக்கவும், பூஞ்சை தொற்று ஏற்படுவதைத் தடுக்கவும் சேர்க்கப்படுகின்றன. 

ஆனால் உப்பு மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் இதயத்திற்கு மோசமானவை, உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன. 

மேலும், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடும். ஏனென்றால், எண்ணெயில் ஹைட்ரஜனேற்றப்பட்ட அல்லது டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளன.

அவை மிக மோசமான கொழுப்புகளாகும். டிரான்ஸ் கொழுப்பு உடலில் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன் அல்லது எல்.டி.எல் கொழுப்பின் அதிகரிப்புக்கு காரணமாகிறது. 

இது இதய நோய்கள், உடல் பருமன் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 

ஊறுகாயில் இருக்கும் அதிகப்படியான உப்பு உடலுக்கு மோசமானது மற்றும் வீக்கம், நீர் தேக்கம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். 

மேலும் ஊறுகாயில் இருக்கும் அதிகப்படியான காரம் அல்சர் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே ஊறுகாய் பிரியர்களை அதனை அளவோடு எடுத்துக் கொண்டால் நல்லது.

கிளினிக்கல் நியூட்ரிஷன் ரிசர்ச் இதழில் 2018 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பாரம்பரியமாக ஊறுகாய்களாக தயாரிக்கப்படும் காய்கறிகள் 

மற்றும் பழங்களில் கலோரிகள் குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கக் கூடும் என்று கூறுகிறது. 

ஒவ்வொரு நாளும் ஊறுகாய் சாப்பிடும் மக்கள் மிகவும் சுவையான உணவுகளுக்கு, குறிப்பாக ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு பசியை அதிகரிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இது அவர்களின் ஒட்டுமொத்த உணவு நுகர்வு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், இந்த உணவுகள் சுவையான மற்றும் 

ஆரோக்கியமற்ற கார்போ ஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளால் செய்யப்பட்டவை என்பதையும் உறுதிப்படுத்தியது. 

மேலும் அதிகரித்த உணவு உட்கொள்ளலால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், அவர்களின் உயர் இரத்த அழுத்த அபாயங்களையும் அதிகரிக்கிறது. 

ஏனெனில் அன்றாடம் ஊறுகாய்கள் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து மேலே குறிப்பிட்டுள்ளோம். 

எனவே ஊறுகாய் பிரியர்கள் அதன் சுவையை பெற வேண்டும் என்று விரும்பினால், வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கையானவை மற்றும் 

சீரான அளவு உப்பு மற்றும் மசாலாப் பொருட்களைக் கொண்டுள்ள ஊறுகாயை குறிப்பிட்ட அளவு மட்டும் சாப்பிடுங்கள். 

தினமும் ஊறுகாய் நுகர்வை தவிர்த்துக் கொள்ளலாம். கடைகளில் வாங்கும் ஊறுகாய்களை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

விதவிதமான வகையிலும் பல்வேறு காய்கறிகளில் செய்யும் ஊறுகாய்களும் இருக்கிறது. 

இதில் அதிகமாக மிளகாய் பொடிகள் சேர்க்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாகவும் காரத்தன்மையுள்ள ஊறுகாய்களும் தயாரிக்கப்படுகிறது. இதனால் உடலில் பிரச்சனைகளை உண்டாக்குமாம்.

ஊறுகாய் சாப்பிட்டால் அடிவயிற்றில் வலிகள், தசைப்பிடிப்புகள் போன்றவை உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். 

இதனால் அடிக்கடி பயன்படுத்துவோர் ஊறுகாயை தவிர்த்தால் நல்லது. ஊறுகாய் அதிக நாட்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயனங்கள், உப்புகள் சேர்க்கப்படுகிறது. 

உடலில் சூட்டின் அளவு அதிகமாக உள்ளவர்கள் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஊறுகாய்யை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் !

ஊறுகாய் சாப்பிடுவோருக்கு சில சமயங்களில் வயிற்றுப் போக்கினால் பாதிப்படைகிறார்கள். இதனால் ஊறுகாயை தவிர்ப்பது உடலுக்கு நல்லதாம். 

அதிகமாக அமிலத்தன்மை ஊறுகாயில் இருக்கிறது. இதனால் வயிற்றுப்புண் வரவும் வாய்ப்புள்ளது. 

நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இதனால் தொற்றுநோயும் வர கூடும்.

ஊறுகாயில் அதிகப்படியான எண்ணெய் சேர்க்கப்படும். இதனால் மாரடைப்புகள் வரவும் வாய்ப்புள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)