சுவையான செட்டிநாடு வெஜிடபிள் குருமா செய்வது எப்படி?





சுவையான செட்டிநாடு வெஜிடபிள் குருமா செய்வது எப்படி?

0

நீங்கள் செட்டிநாடு ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுபவரா? உங்கள் வீட்டிலும் செட்டிநாடு ஸ்டைலில் சமைக்க விரும்புகிறீர்களா? 

சுவையான செட்டிநாடு வெஜிடேபிள் குருமா செய்வது எப்படி?

ஸ்டார் ஹோட்டலில் கிடைக்கும் செட்டிநாடு வெஜிடபிள் குருமாவை, நம்முடைய வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். 

ஸ்டார் ஹோட்டல் குருமா அவ்வளவு சுவையாக இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான். 

நீராவிக் குளியல் உள்ள சிறப்புகள் !

அது என்ன டிப்ஸ் என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

இந்த குருமாவை சப்பாத்தி, ரொட்டி, தோசை, இடியாப்பம், இவர்களுக்கு சைட் டிஷ்ஷாக தொட்டுக் கொள்ளலாம்.

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டிருந்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக குருமா இருந்தால் நன்றாக இருக்கும். 

அதுவும் செட்டிநாடு வெஜிடேபிள் குருமா செய்தால் இன்னமும் அட்டகாசமாக இருக்கும் அல்லவா? 

இப்போது செட்டிநாடு வெஜிடேபிள் குருமா செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

ஸ்டெம் செல்ஸ் சிறப்பு விழிப்புணர்வு பார்வை !

தேவையான பொருட்கள்:

காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி) - 1 1/2 கப்

மல்லித் தூள் - 3 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

ஏலக்காய் - 3

பட்டை - 1 துண்டு

பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)

மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்

தேங்காய் பால் - 400 மிலி

கிராம்பு - 4

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்க !

செய்முறை :

சுவையான செட்டிநாடு வெஜிடேபிள் குருமா செய்வது எப்படி?

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்த தாளிக்க வேண்டும்.

மொய் விருந்து கணக்கை பதிவு செய்ய மொய் டெக் சாப்ட்வேர் !

பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அடுத்து அதில் காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கிளறி விட வேண்டும்.

பின் அதில் ஒரு கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 7-8 நிமிடம் காய்கறிகள் வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

PF என்றால் என்ன? தொிந்து கொள்ள

காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் தேங்காய் பாலை சேர்த்து கிளறி, குறைவான தீயில் ஒரு கொதி விட்டு இறக்கினால், செட்டிநாடு வெஜிடேபிள் குருமா தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)