சுவையான ரைஸ் பிரெட் கட்லெட் செய்வது எப்படி?





சுவையான ரைஸ் பிரெட் கட்லெட் செய்வது எப்படி?

0

காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு பல காய்கறிகளை சேர்த்து இவ்வாறு கட்லெட்களாக செய்து கொடுக்கலாம். 

சுவையான ரைஸ் பிரெட் கட்லெட் செய்வது எப்படி?
காய்கறிகள் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் கூட இதை விரும்பி உண்பார்கள்.  

வெவ்வேறு காய்கறிகள் சேர்த்தாலும் உருளைக்கிழங்குக்கு மாற்று கிடையாது. 

ஆட்டு இறைச்சி வாங்கும் போது கவனிக்க வேண்டியது !

காலையில் அவசரம் அவசரமாகச் சமைப்பது, அதை விட அவசரமாகச் சாப்பிடுவது என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். 

அந்த அளவுக்கு வாழ்க்கை பரபரத்துக் கிடக்கிறது. அமர்ந்து சாப்பிடக்கூட யாருக்கும் நேரமில்லை. 

எது கிடைக்கிறதோ அது தான் உணவு. அப்படிப் பலரும் பயன்படுத்தும் ஓர் உணவுப் பொருள் பிரெட். 

மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்டுக்கும் முக்கிய இடம் உண்டு. 

இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். 

இறால் மீன் வளர்ப்பது எப்படி?

சரி இனி பிரெட் கொண்டு சுவையான ரைஸ் பிரெட் கட்லெட் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையானவை: 

சாதம் - ஒரு கப், 

பிரெட் துண்டுகள் - 3, 

காய்ந்த வேர்க்கடலை - கால் கப், 

பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், 

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், 

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, 

பிரெட் தூள் - ஒரு கப், 

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

வீட்டில் சத்துமாவு தயாரிப்பது எப்ப‍டி?

செய்முறை: 

சுவையான ரைஸ் பிரெட் கட்லெட் செய்வது எப்படி?

வேர்க்கடலையை நன்றாக சுத்தம் செய்து அதை நன்கு கரகரப்பாக பொடியாக அரைத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் சாதம், பொடித்த வேர்க்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, பிரெட் துண்டுகள், 

ரத்தம் குடிக்கும் வவ்வால்கள் தெரியுமா?

கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசைந்து, விரும்பிய வடிவில் கட்லெட்டுகளாக செய்து வைக்கவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கட்லெட்டுகளை பிரெட் தூளில் புரட்டிப் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)