வீட்டிலேயே தர்பூசணி ஐஸ்கிரீம் செய்வது எப்படி?





வீட்டிலேயே தர்பூசணி ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

0

கோடை காலங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

வீட்டிலேயே தர்பூசணி ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
கோடை காலங்களில் வெப்பம் அதிகரித்து உடல் சுலபத்தில் வெப்பமடைகிறது. 

இந்த சமயங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடற்சோர்வை நீக்குகிறது. 

தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர் சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை தீருகிறது. 

தர்பூசணி பழத்தில் சிட்ருலின் சத்து வெள்ளையாக இருக்கும் பகுதியில் அதிகம் உள்ளது. இதை சாப்பிடுவதால் ஆண்மை குறைபாடுகளை போக்க முடியும். 

சரி இனி தர்பூசணி கொண்டு வீட்டிலேயே தர்பூசணி ஐஸ்கிரீம் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

சுகப்பிரசவத்திற்கு கணவன் என்ன செய்ய வேண்டும்?

தேவையான பொருட்கள் :

தர்பூசணி - 2 கப்

சர்க்கரை - தேவையான அளவு

ஃபிரெஷ் கிரீம் - 2 ஸ்பூன்

ரோஸ் எசன்ஸ் - ஒரு துளி

தர்பூசணி ஐஸ்கிரீம்

செய்முறை :

வீட்டிலேயே தர்பூசணி ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

தர்பூசணியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். பின் அதில் ஃபிரெஷ் கிரீம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

அடுத்து அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளை தனி அறையில் தூங்க வைப்பது?

மைய அரைத்து அதை அப்படியே ஒரு கின்னத்தில் ஊற்றி ஃபிரீசரில் வையுங்கள்.

2 மணி நேரம் கழித்துப் பார்த்தால் கெட்டியான பதத்தில் தர்பூசணி ஐஸ்கிரீம் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)