சுவையான பேபிகார்ன் மஷ்ரூம் செலரி சூப் செய்வது எப்படி?





சுவையான பேபிகார்ன் மஷ்ரூம் செலரி சூப் செய்வது எப்படி?

0

செலரி என்ற கீரை வகையானது சீனாவில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. செலரியின் தண்டுகளையும் இலைகளையும் சூப்பாகத் தயார் செய்து சாப்பிடலாம்; இல்லை எனில் சாறாக மாற்றி அருந்தலாம். 

சுவையான பேபிகார்ன் மஷ்ரூம் செலரி சூப் செய்வது எப்படி?

செலரியின் விதையும் மருத்துவக் குணங்கள் நிரம்பியது. செலரியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்த நோயைப் பரிபூரணமாகக் குணமாக்கிக் கொள்ளலாம்.

நம் ஊரில் கொத்தமல்லியை உணவில் பயன்படுத்தப் படுவதைப் போல இந்த செலரி கீரை சீனாவில் பயன்படுத்தப் படுகிறது.

செலரியில் 88 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, மாவுப்பொருள், தாது உப்புக்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை காணப்படுகின்றன. 

இவற்றுடன் வைட்டமின் - ‘ஏ’, வைட்டமின் - ‘பி’ வைட்டமின் - ‘சி’ போன்றவையும் இருப்பதால் இது ஓர் அடிப்படை உணவும் ஆகிறது. 

சரி இனி மஷ்ரூம், செலரி கொண்டு சுவையான பேபிகார்ன் மஷ்ரூம் செலரி சூப் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

இஞ்சி பூண்டு பேஸ்ட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் வைத்திருப்பது எப்படி?

தேவையானவை:

நறுக்கிய காளான் - 20,

காய்கறி வேக வைத்த தண்ணீர் - 2 கப்,

மெலிதாக நறுக்கிய பேபி கார்ன் - 1 கப், 

பூண்டு - 6 பல்,

பொடியாக நறுக்கிய செலரி - கால் கப்,

உப்பு - தேவைக்கு,

மிளகுத்தூள் - சிறிது,

சில்லி சாஸ் - கால் டீஸ்பூன்,

சோயா சாஸ் - 4 துளிகள்,

கறிவேப்பிலை - சிறிது,

வறுத்த முந்திரி - 4,

எண்ணெய் - தேவைக்கேற்ப.

வெஜ் கீமா மசாலா செய்வது எப்படி?

செய்முறை:

சுவையான பேபிகார்ன் மஷ்ரூம் செலரி சூப் செய்வது எப்படி?
கடாயில் எண்ணெய் சூடாக்கி, காளான், பேபி கார்ன் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். சோயா சாஸ், சில்லி சாஸ், கறிவேப்பிலை  சேர்க்கவும். 

உங்கள் வீட்டின் மதிப்பு என்ன? உதவுகிறது இணையதளம் !

கொதித்ததும் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். செலரி இலைகள் மற்றும் வறுத்த முந்திரி தூவிப் பரிமாறவும்.

செலரியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் குறைவான கலோரிகளே காணப்படுவதால் இந்த சூப் குடித்தவுடன் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. 

இது பசியை கட்டுப்படுத்த உதவும். அதோடு செலரி யூரிக் அமிலத்தை குறைக்க உதவுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)