நாம் தினமும் மூன்று வேளை உணவருந்தினாலும் இடையில் அவ்வப்போது சில நொறுக்குத் தீனிகளையும் சாப்பிடுவோம். 

வீட்டில் உள்ள அரிசி சோற்றை வைத்து சூப்பராக ஒரு பலகாரம் செய்யலாம் வாங்க !

பஜ்ஜி, போண்டா, சுண்டல் என ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான ஸ்னாக்ஸ் அயிட்டங்களை தயார் செய்து சாப்பிடுவாங்க. 

உலகின் மிக அதிகமான விலை உயர்ந்த உணவுகள்?

பலகாரம் செய்வதற்கு எந்த பொருட்களும் இல்லாத நேரத்தில் அதை எளிதாக சமாளிக்க ஒரு வழி இருக்கிறது.

பிஸ்கட் அல்லது சாக்லேட் சாப்பிடலாம் என்று நான் சொல்ல வரவில்லை. வீட்டில் இருக்கும் சாப்பாட்டை வைத்து எளிதாக ஒரு ஸ்நாக்ஸ் தயாரிக்க முடியும். 

அது தான் வடகம். இதை பழைய சோற்றை காய வைத்து பொரித்தெடுப்பாங்க. 

வீட்டில் சோறு மீந்து போனால் அதை சிறு துண்டுகளாக பிசைந்து வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்க.

வடகம் நன்றாக மொறு மொறுப்புடன் வர வேண்டும் என்றால் அதை இரண்டு மூன்று நாட்கள் வரை உலர்த்தி காய வைக்க வேண்டும். 

காய்ந்த வடகத்தை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து வைத்துக் கொண்டால் வீட்டில் பலகாரம் இல்லாத நாட்களில் அதை சாப்பிடலாம். 

முறுக்கு சுட்டு வைத்துக் கொண்டு அதை அவ்வப்போது சாப்பிடுவது போலத் தான் இதுவும் இருக்கும்.

வெங்காயம் பச்சையாக சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன?

வடகத்தை அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது அதில் உப்பு, காரம் சேர்த்தும் சாப்பிடலாம். 

அந்தக்காலத்தில் பாட்டியின் கைவண்ணத்தில் பல சிறுவர்களும் இதைத்தான் மெயின் நொறுக்குத் தீனியாக சாப்பிட்டு வந்தனர். 

வீட்டில் உள்ள அரிசி சோற்றை வைத்து சூப்பராக ஒரு பலகாரம் செய்யலாம் வாங்க !

டவுனுக்குள் இருக்கும் பெண்களுக்கு இது குறித்து அதிகம் தெரிந்திருக்காது. 

அவர்கள் தங்களுடைய அம்மா அல்லது பாட்டியிடம் இது குறித்து கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. 

மாங்கொட்டையில் உள்ள நன்மைகள் தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் !

இந்த இயற்கையான நொறுக்குத்தீனி உங்கள் குழந்தைகளுக்கு ஒரு புது வித அனுபவத்தை கொடுக்கும். 

கடையில் வாங்கும் ஐந்து ரூபாய் சிப்ஸ் பொட்டலங்களை விட இது ருசியாக இருக்கும் என்பதால் இதை அடிக்கடி குழந்தைகளுக்கு தயாரித்து கொடுக்கலாம்.