ரேஷன் அரிசியின் நன்மையும் தனித்துவமும்... அறிந்து கொள்ள !





ரேஷன் அரிசியின் நன்மையும் தனித்துவமும்... அறிந்து கொள்ள !

0

ரேஷனில் போடப்பட்டதால் ரேஷன் அரிசி என்கிறோம் மற்றபடி நன்றாக சுத்தம் செய்து சாப்பிட்டால் ரேஷன் அரிசியும் மற்ற விலையுயர்ந்த அரிசிகளை போலத்தான். 

ரேஷன் அரிசியின் நன்மையும் தனித்துவமும்... அறிந்து கொள்ள !

இந்த வகை அரிசிகள் parboil முறையில் தயாரிக்கப்படுகின்றன. 

அதாவது ரேஷன் அரிசியில் நெல்லானது ஊறல், அவியல், உலர வைத்தல், பாலிஷ் என இந்த செயல்முறைகளுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் மிகவும் குறைவு. 

அதனாலே மற்ற அரிசிகளை விட நிறம் குறைவாக இருக்கும். ஆனால் இதுதான் உடலுக்கு ஆரோக்கியமானது.  

குழந்தை பிறந்ததும் வயிறு பழைய நிலைக்கு வருவதற்கு என்ன செய்யணும்?

ரேஷன் அரிசி உணவை, உட்கொண்டால், நீண்ட நேரம் பசியெடுப்பதே கிடையாது. 

ரேஷன் அரிசி உணவை, உண்ணும் போதும் சரி, உண்டு செரிமானம் ஆகும் வரையிலும் சரி, அது ஏற்படுத்தும் ஒரு வித சுகமான மனநிறைவு, கடை அரிசியில் கிடைப்பதில்லை.

ரேஷன் அரிசி உணவு, நாள் முழுவதும் நசநசத்துப் போகாமல் உள்ளது. சில சமயங்களில் மறுநாள் கூட பயன்படுத்தத்தக்க தரத்துடன் உள்ளது.

ரேஷன் அரிசியில் சத்துக்கள் குறைவு, உடல் நலிந்து விடும் என்பதெல்லாம் சுத்த பொய். அது  ஆரோக்யமான உணவு. 

உடல் வலிமை பெறும். நீரிழிவு, இரத்த அழுத்தம், உள்ளிட்ட எந்த நோயும் வராது. 

தக்காளிச் சோறு, சைவ பிரியாணி உள்ளிட்ட சில உணவு வகைகளை, குறைவான செலவில் தரமாகச் சமைக்க, ரேஷன் அரிசியே சிறந்தது.

இண்டக்சன் ஸ்டவ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

எண்ணெய் கத்தரி குழம்பு, சுண்டைக்காய் குழம்பு உள்ளிட்ட குழம்பு வகைகளைச் சற்றே உறைப்பு கூட்டி வைத்து, 

ரேஷன் அரிசியின் நன்மையும் தனித்துவமும்... அறிந்து கொள்ள !

ரேஷன் அரிசி உணவில் கலந்து உண்டால், வயிறும், மனமும் அடையும் நிறைவிற்கும், மகிழ்விற்கும் அளவே கிடையாது.

ரேஷன் அரிசி உண்டால் வயிறெரியும், உடல் பலவீனமாகும் என்பதெல்லாம் கட்டுக்கதை. 

ரேஷன் அரிசி உணவை உண்ணும் போதே, சிலர், முகச்சுளிப்புடன், ஒரு வித அருவறுப்பு மனப்பான்மையோடு உண்கின்றனர். 

தோல் அழற்சி மற்றும் அறிகுறிகளும் காரணங்களும்? #Eczema

இந்த எண்ணங்களே அவர்களுக்கு அத்தகைய நிகழ்வுகளாக மாறுகின்றன. ரசித்து, ருசித்து உண்பவர்களுக்கு ஏதும் நேர்வதில்லை.

ரேஷன் அரிசியின் வகைகளைப் பொறுத்து, சுவை, மணம், செரிமானத்தன்மை நேரம், ஆகியன கூடவோ, குறையவோ செய்யலாம்.  

நீரிழிவு நோய்க்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அரிசி ரேஷன் அரிசி. 

ரேஷன் அரிசி வாசம் வீசுகிறது என்ன செய்யலாம்?

சுடு நீர் உப்பு போட்டு களைந்தால் வாசம் போய் விடும்..

ரேஷன் அரிசி பிடிக்க வில்லை என்ன செய்யலாம்?

கழுவி காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வையுங்கள். பச்சரிசி என்றால் அப்படியே பயன்படுத்தலாம். 

புழுங்கல் என்றால் வேக வைத்து சலித்து எடுத்து கொள்ளுங்கள். சுவையான இடியாப்பம் செய்ய முடியும்.

நீர் சத்து குறையாமல் இருக்க இதை செய்தால் போதும் ! 

இல்லை ரேஷன் அரிசி பிடிக்காது என்றால் இட்லி தோசை தான்.

நீங்கள் வாங்கும் இட்லி அரிசி யுடன் சரிக்கு சரி ரேஷன் புழுங்கல் அரிசி சேர்க்க குஷ்பு இட்லி கிடைக்கும்.

ரேஷன் அரிசியின் நன்மையும் தனித்துவமும்... அறிந்து கொள்ள !

பச்சை அரிசி சேர்க்க ஆப்பம் சுவையாக. உள்ளது. புழுங்கல் அரிசி வறுத்து அரைத்து வைத்து கொள்ள தேவைக்கு உப்புமா, இனிப்பாக சாப்பிட களி (வெல்லம்) அனைத்தும் செய்ய முடியும்.

தேவை என்றால் காரமோ, இனிப்போ சேர்த்து நொறுவல் ஆகவும் செய்ய முடியும்.

பெண்களின் வயாகரா ஜாதிக்காய்... பெண்கள் அறிவது அவசியம் !

ஒருமுறை உப்பு கலந்த சுடு நீர் போதும் . நமக்கு பிடித்த மாதிரி ரேஷன் அரிசி உருமாறி விடும்.சாப்பிட சுவையாகவும் இருக்கும்.

ஒரு மாதம் சாப்பிட்டு பின் உடல் மாற்றம் உங்களால் உணர முடியும். எப்பொழுதும் உணவின் மேல் மரியாதை வையுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)