ருசியான புட்டரிசி அல்வா செய்வது எப்படி?





ருசியான புட்டரிசி அல்வா செய்வது எப்படி?

0

கருப்பு அரிசி என்றால் தமிழகத்தில் இன்னொரு பெயர் உள்ளது, அதுதான் கவுனி கருப்பு அரிசி என்றும் அழைப்பர். இந்த கருப்பு அரிசி முக்கியத்துவம் சமீப காலமாக அனைத்து மக்களிடமும் சென்றடைந்திருக்கின்றது. 

ருசியான புட்டரிசி அல்வா செய்வது எப்படி?

இந்த கருப்பு கவுனி அரிசியை இந்தியாவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தான் அதிகமாக சாகுபடி செய்கின்றனர்.  கருப்பு கவுனி அரிசியில் இயற்கையாகவே அதிக அளவில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்ட ஒரு உணவு பொருளாகும்.

இந்த கருப்பு அரிசியில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களைப் போக்க உதவுகிறது. கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. 

இதனால் குளுக்கோஸ் நீண்ட நேரம் உங்கள் உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. கருப்பு அரிசி போன்ற முழு தானியங்களை உட்கொள்வதால் உங்கள் உடலில் டைப் 2 நீரிழிவு அபாயம் குறைக்கப்படுகிறது. 

மலச்சிக்கலால் இந்த பெண்ணுக்கு 10 வருஷம் மறந்து போச்சாம் !

உங்கள் உடல் எடை கண்காணிக்கப் படுகிறது, இதனால் உங்கள் உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. 

உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருந்தால், வெள்ளை அரிசியை உண்பதற்கு மாற்றாக, கருப்பு கவுனி அரிசியை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதால், உங்கள் உடல் நீரிழிவை எதிர்த்து போராட உதவுகிறது.

தேவையான பொருட்கள் :

கறுப்பு புட்டரிசி - 500 கிராம்

சர்க்கரை (Sugar) - 1 கிலோ

தேங்காய்ப்பால் - 250 மில்லி லிட்டர்

பாதாம் பருப்பு -    20

முந்திரிப் பருப்பு -  10

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

நெய் -  250 மில்லி லிட்டர்

சத்துமிக்க காளான் கிரேவி செய்வது எப்படி?

செய்முறை :

கறுப்பு புட்டரிசியை ஊற வைத்து, தண்ணீரை வடித்து விட்டு, மாவாக்கிக் கொள்ளவும். பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து எடுத்து, தனியே வைக்கவும்.

கனமான வாணலி அல்லது பாத்திரத்தில் 200 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை கலந்து கொதிக்க வைத்து, கம்பி பதமாக பாகு காய்ச்சவும்.

அதன்பின் அரிசிமாவை கொஞ்சம், கொஞ்சமாக போட்டுக் கிளறவும். அதன்பின் தேங்காய்பால் ஊற்றி, கிளறவும்.

அனைத்தும் கலந்து கெட்டியானதும் நெய் ஊற்றி, வறுத்த முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, மற்றும் ஏலக்காய் பொடி போட்டு, அல்வா பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)