வல்லாரை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, இது மூளையைச் சுறுசுறுப்பாக்கும், மூளை வளர்ச்சிக்கு உதவும் என்பது தான்.

ஆரோக்கியம் தரும் வல்லாரைக் கீரை தோசை
வல்லாரைக் கீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் இதனை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தியானது அதிகரிக்கும். 

வல்லாரைக்கு சைனஸை குணப்படுத்தும் சக்தியும் உண்டு. வல்லாரையைச் சற்று குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது. 

கொள்ளுவை வல்லாரையுடன் சேர்த்து அரைத்து மாவு கலந்து தோசை சுடலாம். 

அத்தகைய வல்லாரைக் கீரையை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை தோசை செய்து சாப்பிடலாம். 

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அந்த வல்லரைக் கீரை தோசையின் செய்முறையை படித்து அவற்றை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்.

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை !

தேவையான பொருட்கள்:

வல்லாரைக் கீரை - 1 கப் (பொடியாக நறுக்கியது)

கேழ்வரகு - 1/4 கப்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

உளுத்தம் பருப்பு - 1/4 கப்

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

புழுங்கல் அரிசி - 1 கப்

கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

சுவையான செட்டிநாடு கோழி குழம்பு செய்வது எப்படி?

செய்முறை:

ஆரோக்கியம் தரும் வல்லாரைக் கீரை தோசை செய்வது எப்படி?

மிளகு தட்டை முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் கேழ்வரகு ஆகியவற்றை நீரில் 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அவைகளை நன்கு கழுவி, மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

சுவையான சிக்கன் டிக்கா செய்வது எப்படி?

அடுத்து, அந்த மாவில் வல்லாரைக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அந்த மாவை தோசைகளாக ஊற்றி எடுத்தால், ஆரோக்கியமான வல்லாரைக் கீரை தோசை ரெடி !