கரிசலாங்கண்ணி என்றாலே கூந்தல் பராமரிப்பு தான் முதலில் நம் கண் முன் வந்து நிற்கும். 

ஆரோக்கியம் தரும் கரிசலாங்கண்ணி தோசை செய்வது எப்படி?
கரிசலாங் கண்ணி ரத்தத்தைச் சுத்தம் செய்து, ரத்த உற்பத் திக்கு உதவும். சருமப் பிரச்னை களைச் சரி செய்யும். கரிசலாங்கண்ணியை துவையலாகவும் கூட்டாகவும் செய்வார்கள்.

கரிசலாங்கண்ணியை அரைத்து சாறு எடுத்து அதை தோசை மாவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். 

தேவையான பொருட்கள்:

கரிசலாங்கண்ணி கீரை1 கட்டு

அரிசி மாவு -1 கப்

தக்காளி - 1

சாமை மாவு - 1 கப்

சீரகம் - அரை டீஸ்பூன்

தோசை மாவு - 1 கப்

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

கொலஸ்ட்ராலுக்கு டாட்டா காட்டும் பார்லி !

செய்முறை :

ஆரோக்கியம் தரும் கரிசலாங்கண்ணி தோசை செய்வது எப்படி?

கரிசலாங்கண்ணி கீரையை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 

ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, சாமை மாவு, தோசை மாவு போட்டு நன்றாக கலந்து ஊற வைக்க வேண்டும்.

நீரி­ழி­வைக் ­கட்­டுப்­ப­டுத்தும் கொய்யா !

ஊற வைத்தவற்றை நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த மாவை 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும். 

அதில் சீரகம், கீரை, தேவையான அளவு உப்பு, தக்காளி சேர்த்து அரைத்துக் கரைக்க வேண்டும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி காய்ந்ததும் மாவை தோசையாக ஊற்றி எடுக்க வேண்டும். இந்த தோசை மிகவும் சத்தானது.