முடக்கத்தான் கீரை தோசை செய்வது எப்படி?





முடக்கத்தான் கீரை தோசை செய்வது எப்படி?

0

முடக்கு வாதத்தை அறுத்தான் என்பதே முடக்கத்தான் என்பதன் பொருள். இது, மழைக் காலங்களில் வயல்களின் ஓரமாக வளரக் கூடியது. முடக்கு வாதம் ஏற்படாமல் காக்கும். 

முடக்கத்தான் கீரை தோசை செய்வது எப்படி?
மூட்டுகளில் ஏற்படக் கூடிய வலி, வீக்கம் போன்ற வற்றைச் சரி செய்யும். முடக்கத்தானின் இலைச் சாற்றைத் தலையில் தடவி, சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம். 

முடக்கத்தானை மாவுடன் சேர்த்து, தோசையாக ஊற்றிச் சாப்பிடலாம்.

மூன்றி ஒரு பங்கு என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். இதனால், செரிமானக் கோளாறு சரியாகும். எளிதில் ஜீரணமாகும்.

தேவையானவை: 

நறுக்கிய  முடக்கத்தான் கீரை – 2 கப், 

புழுங்கல் அரிசி – ஒரு  கப், 

உளுந்து – ஒரு டீஸ்பூன், 

வெந்தயம் – ஒரு டீஸ்பூன், 

துவரம் பருப்பு – 2 டீஸ்பூன், 

எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

டேஸ்டியான வாழைப்பழ பிஸ்கட் செய்வது எப்படி?

செய்முறை: 

முடக்கத்தான் கீரை தோசை செய்வது எப்படி?

அரிசி, உளுந்து, வெந்தயம், துவரம் பருப்பு ஆகிவற்றை ஒன்று சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் அரைக்கவும்.

அரைத்துக் கொண்டிருக்கும் போதே முடக்கத்தான் கீரையையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். 

ஸ்பெஷல் பால் அல்வா செய்வது எப்படி?

பிறகு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்து வைக்கவும். இதை 7 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, ஒன்றரை கரண்டி மாவு விட்டு, ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும். 

பூண்டு மிளகாய்ப் பொடி, இதற்கு தொட்டு சாப்பிட ஏற்றது .

குறிப்பு: 

முடக்கு அறுத்தான் என்பது தான் முடக்கத்தான் என்று அழைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சாப்பிட… கை, கால், மூட்டு வலி குணமாகும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)