கேரட் பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !





கேரட் பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

0

கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்து வர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும்.

கேரட் பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !
கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. 

கேரட்டுடன் சிறிதளவு வெண்ணெய் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும். 

கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் 

தாய்ப்பாலை கணவனுக்கும் கொடுக்கலாமா?

இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. 

இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.

 தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல்  தடுக்கிறது. 

கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.

பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். 

கேரட் பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !
வயிற்றுப்  போக்கு, வயிற்றுப் பொருமல், மூல உபத்திரம், வயிற்றுவலி இருப்பவர்கள், கேரட்டை திப்பியில்லாமல் அரைத்து ஜுஸாகக்  குடிக்கலாம், விரைவில் குணமடையும். 

கேரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’ சத்து கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது. விழித்திரைக்கு பலம் சேர்க்கும். கண்பார்வை நன்றாக இருக்கும். 

300 முட்டைகளை கொண்டு முட்டை கிரேவி !

தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. கோடை காலத்தில் வெளியில் சென்று வரும் போது புறஊதா கதிர்கள் தோலை பாதிக்கிறது. 

தோல் கருப்பாவதை தடுக்கிறது. தோலில் சிராய்ப்பு காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை பசையாக்கி தடவினால் அரிப்பு, சிவப்பு தன்மை போகும். வேர்குரு மறையும்.

பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். 

வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் மிகவும் நல்லது. பசியைத் தூண்டி, சிறுநீர் பெருக்கியாகவும்  செயல்படும். 

கேரட் பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

சருமம் வறண்டு போய், அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி சாலட் ஆகச் செய்து சாப்பிடலாம். இன்சுலின் அதிகம் சுரக்க உதவுகிறது. 

கேரட், சர்க்கரை நோயாளிகள் கேரட்டை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். 

கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுக்கும் போது பக்க விளைவுகளின் வீரியத்தைக் குறைக்க 48 நாட்கள் கேரட் ஜுஸ் குடிப்பது  நல்லது.

சுக பிரசவம் ஆவதற்கான அறிகுறிகள், தயாராவது எப்படி?

சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க, கேரட்டை  பச்சடியாக செய்து சாப்பிடலாம். 

உடனடி பலன் கிடைக்கும். மாலை கண் நோயை வராமல் தடுக்க உதவும். இரத்ததில் உள்ள கொழுப்பை குறைத்து புற்று நோய் வராமல் காக்கிறது. 

கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும். கொலஸ்ட்ராலை குறைக்க கூடிய நார்ச்சத்துகள் இதில் அதிகம் உள்ளது. 

கேரட் பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை  வலுவாக்குகிறது. 

வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம். 

விட்டமின் ஏ இதற்கு காரணமாகிறது. கேரட் சாப்பிடுவதால் முகம் பொலிவு பெற முடியும். உணவு நன்கு செரிமானம் ஆகும். பூச்சிகளால் வரும் நோய்களை தடுக்கிறது. 

பெண்கள் கருத்தரிப்பது எப்படி?

உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்துக்கு தேவையான சத்து கிடைக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)