விநாயகர் சதுர்த்திக்கு ராகி பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?





விநாயகர் சதுர்த்திக்கு ராகி பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

0

பால் கொழுக்கட்டையிலேயே வித்தியாசமாக செய்ய நினைத்தால், ராகி பால் கொழுக்கட்டை செய்யலாம். 

விநாயகர் சதுர்த்திக்கு ராகி பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு ராகி பால் கொழுக்கட்டையை செய்து விநாயகருக்கு படையுங்கள்.

தேவையான பொருட்கள்:

பால் - 4-5 கப்

சர்க்கரை - 1 கப்

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

கெட்டியான தேங்காய் பால் - 1 கப்

கொழுக்கட்டைக்கு...

ராகி மாவு - 1 கப்

அரிசி மாவு - 1/2 கப்

உப்பு - 1/4 டீஸ்பூன்

தண்ணீர் - 1/2 கப்

பால் - 1 கப்

நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் ராகி மாவு, அரிசி மாவு, உப்பு, தண்ணீர் மற்றும் பால் ஆகியவற்றை நீர் போன்று கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியில் அதை ஊற்றி, ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி, நெய் சேர்த்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியில் பால் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் ராகி உருண்டைகளை சேர்த்து 5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பிறகு அதில் தேங்காய் பால், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி, 15 நிமிடம் கழித்து பரிமாற வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)