தேவையானவை :

இட்லி தயாரிப்பதற்கு :

புழுங்கல் அரிசி - 600 கிராம் (3 கப்)

நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி

உளுந்து - 200 கிராம் (1 கப்)

உப்பு - தேவையான அளவு

சாண்ட்விச் மஸாலா தயாரிப்பதற்கு :

கொத்துக் - 1 கிலோ

பெரிய வெங்காயம் - 2

நல்லெண்ணெய் - 50 மில்லி லிட்டர்

பச்சை மிளகாய் - 3

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

சீரகத்தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொத்துக்கறி சாண்ட்விச் இட்லி செய்வது எப்படி?

கொத்துக் கறியை வேக வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். 

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, கொத்துக் கறியைப் போட்டு கிளறவும்.

அதன் பின் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, சீரகத்தூள் சேர்த்து கிளறவும். கொத்துக்கறி நன்றாக வதங்கியதும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.

இட்லி சாண்ட்விச் செய்முறை:

ஊற வைத்துள்ள அரிசியை சற்று கரகரப்பாக ஆட்டிக் கொள்ளவும். உளுந்தை வழுவழுப்பாக ஆட்டி, 2 மாவையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.

மறுநாள் காலையில் இட்லி தட்டுகளில் இதயம் நல்லெண்ணெய் தடவிக் கொள்ளவும்.

மாவிலிருந்து சிறிதளவு எடுத்து இட்லி தட்டில் ஊற்றி இதன் மீது கொத்துக்கறி கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து வைக்கவும்.

மறுபடியும் இதன் மீது இட்லி மாவிலிருந்து சிறிதளவு ஊற்றவும். இது போல எல்லா இட்லி மாவிலும் செய்து, வேக வைத்து, இட்லி சாண்ட்விச் தயாரித்து எடுத்து பரிமாறவும்.